Published:Updated:

`சேற்றில் இறக்கிய ஹெலிகாப்டர்' - ரூ.100 கோடியில் புதிய ஏர்பஸ் வாங்கிய Lulu group யூசுப் அலி!

எம்.ஏ.யூசுப் அலியின் ஏர்பஸ் ஹெலிகாப்டர்

இரண்டு பைலட்கள் மற்றும் ஏழு பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய முடியும். அவசரமாக தண்ணீர் பரப்பிலும் லேண்ட் செய்யும் வசதி உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 20,000 அடி உயரத்தில் பறக்கும் வல்லமைகொண்டது ஹெச் 145 ஏர்பஸ் ஹெலிகாப்டர்.

`சேற்றில் இறக்கிய ஹெலிகாப்டர்' - ரூ.100 கோடியில் புதிய ஏர்பஸ் வாங்கிய Lulu group யூசுப் அலி!

இரண்டு பைலட்கள் மற்றும் ஏழு பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய முடியும். அவசரமாக தண்ணீர் பரப்பிலும் லேண்ட் செய்யும் வசதி உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 20,000 அடி உயரத்தில் பறக்கும் வல்லமைகொண்டது ஹெச் 145 ஏர்பஸ் ஹெலிகாப்டர்.

Published:Updated:
எம்.ஏ.யூசுப் அலியின் ஏர்பஸ் ஹெலிகாப்டர்
வளைகுடா நாடுகளை மையமாகக்கொண்டு தொழில் செய்து வருகிறார் லூலூ குரூப் சேர்மன் எம்.ஏ.யூசுப் அலி. இவர் தனது பயணங்களுக்கு இத்தாலியில் தயரிக்கப்பட்ட அகஸ்டா வெஸ்ட்லாண்ட் கம்பெனியின் விடி-ஒய்எம்ஏ ஹெலிகாப்டரை இதற்கு முன்பு பயன்படுத்தி வந்தார்.

2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தன் மனைவியுடன் எம்.ஏ.யூசுப் அலி ஹெலிகாப்டரில் கொச்சி பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தார். அப்போது நடுவானில் வைத்து ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து சேறு நிறைந்த சதுப்பு நிலத்தில் ஹெலிகாப்டரை லாவகமாக தரையிறக்கினார் பைலட். அந்த சமயத்தில் யூசுப் அலியும், அவரின் மனைவி மற்றும் அவருடன் பயணித்த 4 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். ஹெலிகாப்டரில் இருந்து வெளியேறி இடுப்பளவு சேற்றில் இறங்கி நடந்து யூசுப் அலியும், அவரின் மனைவியும் கரை ஏறினர். இதையடுத்து தனது பழைய ஹெலிகாப்டரை மாற்றிவிட்டு ரூ.100 கோடி செலவில் அதி நவீன தொழிநுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட ஹெச் 145 ஏர்பஸ் சொகுசு ஹெலிகாப்டரை யூசுப் அலி வாங்கியுள்ளார்.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்

இந்த வகை ஹெலிகாப்டரை இந்தியாவில் முதன் முதலில் வாங்கியவர் என்ற பெருமை பெற்றவர் ஆர்.பி குரூப் நிறுவனங்களின் உரிமையாளரான கேரளாவைச் சேர்ந்த ரவி பிள்ளை. கடந்த மார்ச் மாதம் ஹெச் 145 ஏர்பஸ் சொகுசு ஹெலிகாப்டரை வாங்கிய கையோடு குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் ஹெலிகாப்டரை நிறுத்தி சிறப்பு பூஜைகளும் செய்தார் ரவி பிள்ளை.

எம்.ஏ.யூசுப் அலி
எம்.ஏ.யூசுப் அலி

புதிதாக வாங்கும் சொகுசு கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு பூஜை போடுவது குருவாயூரில் வழக்கமான ஒன்றுதான். ஆனால் ஹெலிகாப்டருக்கு அர்ச்சகர்கள் பூஜை போட்டு, ஆரத்தி எடுத்தது அதுதான் முதல் முறை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொழிலதிபர் ரவி பிள்ளையைத் தொடர்ந்து ஹெச் 145 ரக ஹெலிகாப்டரை 100 கோடி ரூபாய்க்கு வாங்கி கவனம் ஈர்த்துள்ளார் லூலூ குரூப் சேர்மன் எம்.ஏ.யூசுப் அலி. இந்த ஹெலிகாப்டர் கொச்சி வந்தடைந்ததுள்ளது. இதையடுத்து ஹெச் 145 ஏர்பஸ் சொகுசு ஹெலிகாப்டர் வாங்கிய இந்தியாவின் இராண்டாவது நபர் என்ற பெருமையை யூசுப் அலி பெற்றுள்ள்ளார். சொகுசு மற்று பாதுகாப்பு காரணங்களால் எச் 145 ஆடம்பர ஹெலிகாப்டர் அதிக அளவில் வாங்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 1500 ஹெலிகாப்டர்கள் விற்பனை ஆகியுள்ளது.

எம்.ஏ.யூசப் அலியின் புதிய ஹெச் 145 ஏர்பஸ் ஹெலிகாப்டர்.
எம்.ஏ.யூசப் அலியின் புதிய ஹெச் 145 ஏர்பஸ் ஹெலிகாப்டர்.

ஜெர்மன் கம்பெனி தயாரித்த ஹெச் 145 ஹெலிகாப்டரில் இரண்டு இன்ஜின்கள் அமைந்துள்ளன. மணிக்கு 246 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும். எல்லா வானிலைக்கும் ஏற்ப சிறப்பாக செயல்படும் தன்மைகொண்டது. சிவில் மற்றும் ராணுவ பயன்பாட்டுக்கும் ஏற்ற ஹெலிகாப்ட்டர் இது. இரண்டு பைலட்கள் மற்றும் ஏழு பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய முடியும். அவசரமாக தண்ணீர் பரப்பிலும் லேண்ட் செய்யும் வசதி கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 20,000 அடி உயரத்தில் பறக்கும் வல்லமைகொண்டது. தனியார் மற்றும் வணிக விமானப் போக்குவரத்து, கடல்சார் செயல்பாடுகள், அவசர மருத்துவ சேவைகளுக்கு ஏற்ற ஹெலிகாப்டர் இது.