Published:Updated:

`எங்க எல்லோருக்கும் ஜனவரி 1-ம் தேதிதான் பிறந்தநாள்!' - ஆதார் தகவலைச் சுட்டிக்காட்டும் ம.பி. கிராமம்

ராம் பிரசாத்

மத்தியப்பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் ஆதார் தரவுப்படி ஜனவரி 1-ம் தேதி நிறைய பேர் பிறந்துள்ளனர்.

Representation image
Representation image

மத்திய அரசு அனைத்து முக்கியமான சேவைகளுக்கும் ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கியுள்ளது. எரிவாயு சிலிண்டரிலிருந்து சிம் கார்டு வரைக்கும் ஆதார் இருந்தாதான் இப்போ எல்லாம் வேலையே நடக்கும். ஆதாருக்கு எனத் தனி ஆணையமே செயல்படுகிறது. “Unique Identification Authority of India” இதுதான் அந்த ஆணையத்தின் பெயர். மாநிலங்கள் முழுவதும் ஆதார் சேவை மையங்கள் உள்ளன. ஆதாரில் பிறந்த தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். பிறப்புச் சான்றிதழ், பள்ளி, கல்லூரிகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள், பான் கார்டு இதில் இருக்கும் பிறந்த தேதியை ஆவணமாகக் கொண்டு அதைப் பதிவு செய்வார்கள். இது எதுமே என்கிட்ட இல்லைன்னு கேட்டீங்கன்னா அதுக்கான பதில் இந்தக் கட்டுரையில் இல்லை. ஆனால் இன்னொரு மேட்டர் இருக்கு.

AADHAR CARD
AADHAR CARD

மத்தியப்பிரதேசத்தில் உள்ள காக்ரா( kakra) கிராமத்தில் உள்ளவர்களின் ஆதார் கார்டுகளில் பெரும்பாலும் ஜனவரி 1-ம் தேதி பிறந்த தேதியாக உள்ளது. `ஆதார் கார்டுல இல்லாத தப்பா. அதுல இருக்க போட்டோவைப் பார்த்தாலே பழைய பிளாக் அண்ட் வொய்ட் போட்டோ போலத்தான் இருக்கும். நானே நிறைய முறை பிறந்த தேதியில இருந்து கதவு எண் வரைக்கும் மாற்றுவதற்கு ஆதார் மையத்துக்கு நடையா நடந்து இருக்கிறேன்' என உங்களுக்கு எண்ணத் தோன்றலாம். அப்படி எதுவும் இல்லை.

பிழையாக இருக்குமோ என்று பார்த்தால் வருடங்களில் வித்தியாசம் இருக்கிறது. ஆதார் கார்டுகளில் உள்ள வயதுக்கு அவர்களின் தோற்றத்திற்கும் ஓரளவுக்கு ஒத்துப்போகிறார்கள். அப்போ இது பிழையல்ல. ஒரு கிராமத்தில் நிறைய பேர் ஜனவரி 1-ம் தேதி பிறந்தா அது அதிசயமா தானே இருக்கணும் அப்படியும் இல்லை.

சரி என்னதான் சங்கதின்னு விசாரிச்சா, அது பழங்குடியினர் வசிக்கும் கிராமம். இந்த மக்களுக்கு முறையான பிறப்புச் சான்றிதழ்கள் எதும் இல்லை. அவர்களுக்கு பிறந்த தேதியும் நினைவில் இல்லை. மத்திய அரசு ஆதார் அனைவருக்கும் கட்டாயம் என அறிவித்துவிட்டது. 2016-ல் இந்த கிராமத்தில் ஆதார் அட்டை வழங்குவதற்காக முகாம் அமைத்துள்ளனர். ஒவ்வொருவரையும் பார்த்து அவர்களுக்குத் தோன்றிய வயதை ஆதாரில் பதிவு செய்துள்ளனர்.

`எங்க எல்லோருக்கும் ஜனவரி 1-ம் தேதிதான் பிறந்தநாள்!' - ஆதார் தகவலைச் சுட்டிக்காட்டும் ம.பி. கிராமம்

ஆதார் ஆணையத்தின் கொள்கையின் படி இது ஒன்றும் தவறு அல்ல. ஆதார் திட்டத்தின் கீழ் மக்களைச் சேர்ப்பதற்காக பணி நடைபெறும் போது பிறந்த தேதிக்கான சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கத் தவறினால் இயல்பாக பிறந்த ஆண்டினைக் கணக்கில் கொண்டு ஜனவரி 1-ம் தேதி பிறந்த தேதியாக அறிவிக்கப்படும். உங்களின் பிறப்புச் சான்றிதழைக் கொண்டு மீண்டும் இந்தத் தேதியினைத் திருத்திக்கொள்ளலாம். இதன்படிதான் அதிகாரிகள் அவ்வாறு பதிவு செய்துள்ளனர்.

`மேலே போகாதே; பணம் வேணும்னா தர்றேன், இறக்கிவிடு’- இணையத்தில் ஹிட் அடித்த பாராகிளைடிங் இளைஞர்

இதுகுறித்து தி இந்து ஆங்கில நாளிதழிடம் பேசிய கிராம மக்கள், “எங்கள் கிராமத்தில் நிறைய நபர்களுக்கு ஜனவரி 1-ம் தேதி பிறந்த தினமாக உள்ளது. எங்களது பிறந்த தேதி முறையாகப் பதிவு செய்யவில்லை. நாங்கள் பிறந்த நாள்களும் கொண்டாடியது இல்லை” என்கின்றனர்