Published:Updated:

உலகின் மிகச்சிறந்த தலைவர் யார்.... அக்பர், வின்சென்ட் சர்ச்சிலை விஞ்சிய மகாராஜா ரஞ்சித்சிங்!

லாகூரில் உள்ள ரஞ்சித் சிங் சிலை

சிறுவயதில் இருந்தே போரில் ஈடுபட்ட ரஞ்சித் சிங்கை, பெரியம்மை நோய் தாக்கியதால் ஒரு கண்ணில் பார்வையையும் இழந்தார். ஆனால், போரிடும் திறன் காரணமாக, பஞ்சாப்பின் அனைத்து சிற்றரசுகளையும் ஒருங்கிணைத்து மிக வலுவான பேரரசாக மாற்றினார்.

உலகின் மிகச்சிறந்த தலைவர் யார்.... அக்பர், வின்சென்ட் சர்ச்சிலை விஞ்சிய மகாராஜா ரஞ்சித்சிங்!

சிறுவயதில் இருந்தே போரில் ஈடுபட்ட ரஞ்சித் சிங்கை, பெரியம்மை நோய் தாக்கியதால் ஒரு கண்ணில் பார்வையையும் இழந்தார். ஆனால், போரிடும் திறன் காரணமாக, பஞ்சாப்பின் அனைத்து சிற்றரசுகளையும் ஒருங்கிணைத்து மிக வலுவான பேரரசாக மாற்றினார்.

Published:Updated:
லாகூரில் உள்ள ரஞ்சித் சிங் சிலை

உலகிலேயே மிகச் சிறந்த தலைவர், தலைமைப் பண்பு கொண்ட ஆளுமை என இந்தியாவின் மாமன்னர் ரஞ்சித் சிங்கை பி.பி.சி நிறுவனத்தின் சர்வதேச வரலாற்று புத்தகம் தேர்வு செய்துள்ளது. இந்தப் பட்டியலில், பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்சென்ட் சர்ச்சிலுக்கு மூன்றாவது இடமே கிடைத்துள்ளது. வாசகர்கள் கலந்துகொண்ட இந்த வாக்கெடுப்பில், ரஞ்சித் சிங்குக்கு 38 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன. ஆப்பிரிக்க சுதந்திர போராட்ட வீரர் ஆம்க்ரல் கப்ரால் இரண்டாமிடம் பிடித்துள்ளார். போர்த்துக்கீசியர்களின் பிடியில் இருந்து 10 லட்சம் கினிய நாட்டுக்காரர்களை விடுவித்ததில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

பாகிஸ்தான் குஜ்ரன்வாலாவில் ரஞ்சித் சிங் பிறந்த இடம்
பாகிஸ்தான் குஜ்ரன்வாலாவில் ரஞ்சித் சிங் பிறந்த இடம்

அதோடு, பல ஆப்பிரிக்க நாடுகள் சுதந்திரம் பெறவவும் ஆம்க்ரல் கப்ரால் காரணமாக இருந்துள்ளார். இவருக்கு 25 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன. வின்சென்ட் சர்ச்சிலுக்கு 7 சதவிகித வாக்குகளே கிடைத்தன. `முடிவுகள் எடுப்பதில் வல்லவர் அதோடு போர்தந்திரம் வகுப்பதில் சிறந்தவர்' என்று வின்சென்ட் சர்ச்சில் பற்றி அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கனுக்கு 4-வது இடமும் பிரிட்டன் இளவரசி முதலாம் எலிசபெத்துக்கு 5-வது இடமும் கிடைத்துள்ளன. ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட கண்டங்களைச் சேர்ந்த 20 ஆளுமைகள் இந்தப் பட்டியலில் இடம் பிடித்திருந்தனர். பட்டியலில் முகாலாய பேரரசர் அக்பரும் இடம்பெற்றிருந்தார். ஆனால், அவருக்கு பெரிய அளவில் வாசகர்களிடத்தில் வரவேற்பு கிடைக்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குஜ்ரன்வாலாவில் (இப்போதைய பாகிஸ்தானில் உள்ளது) பிறந்த ரஞ்சித் சிங், சிறுவயதில் இருந்தே போரில் ஈடுபட்டவர். பெரியம்மை நோய் தாக்கியதால் ஒரு கண்ணில் பார்வையையும் இழந்தார். ஆனால், போரிடும் திறன் காரணமாகப் பஞ்சாப்பின் அனைத்து சிற்றரசுகளையும் ஒருங்கிணைத்து மிக வலுவான பேரரசாக மாற்றிக் காட்டினார். 1799-ம் ஆண்டு லாகூர் நகரை தன் 18-வது வயதில் ரஞ்சித் சிங் கைப்பற்றினார். 1801-ம் ஆண்டு 20-வது வயதில் மன்னராக முடி சூட்டினார். அதற்குப் பிறகுதான் இவரின் சீக்கியப் பேரரசு வலுவடையத் தொடங்கியது. இவரின் ஆட்சிக்காலத்தில் சீக்கிய பேரரசு வட மாநிலங்களில் பெரும் பகுதியில் பரந்து விரிந்திருந்தது.

பொற் கோயில்
பொற் கோயில்

இந்தியாவுக்கு படையெடுத்து வந்த ஆப்கானிஸ்தான் படையினரை விரட்டியடிக்க பஞ்சாப் கால்ஸா ராணுவத்தை உருவாக்கியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. சீக்கிய மத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், இவரின் அமைச்சரவையிலும் கால்ஸா ராணுவத்திலும் பல சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களும் இவரின் ராணுவத்தில் பணியாற்றினர். ஐரோப்பியர்களுக்கும் கால்ஸா ராணுவத்தில் இடமளிக்கப்பட்டது. மதசார்பின்மை இவரின் முக்கிய அடையாளம் ஆகும். எந்த மதத்தைச் சார்ந்தவரையும் நிந்தித்து விடக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் இருப்பார்.

ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருந்தார். அமிர்தசரஸில் உள்ள சீக்கிய குருத்வாராவை , சீரமைத்து பொற்கோயிலாக மாற்றியதும் ரஞ்சித் சிங்தான். ஆப்கானிஸ்தான், சீனாவிலும் ரஞ்சித் சிங்கின் புகழ் பரவியிருந்தது. தற்போது, இங்கிலாந்து ராணியின் கிரீடத்தில் உள்ள கோகினூர் வைரம் ரஞ்சித் சிங்கிடத்தில்தான் இருந்தது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில், இவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்ல, பிரான்ஸ் நாட்டிலுள்ள ெ ட்ரோஃபஸ் நகரத்திலும் மகாராஜா ரஞ்சித் சிங்குக்கு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு, ஒரு வரலாற்றுப் பின்னணியும் உள்ளது. இந்தியாவில் இருந்து பிரிட்டிஷார்களை விரட்டியடிக்க, ராணுவத்தை நவீனப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் ரஞ்சித் சிங் இருந்தார்.

ரஞ்சித் சிங்
ரஞ்சித் சிங்

எனவே, ஆங்கிலேயர்களுக்கு அப்போது எதிரிகளாக இருந்த பிரெஞ்சுக்காரர்களுடன் கூட்டு அமைத்துக்கொண்டார். பிரான்சில் உள்ள செயின்ட் ட்ரோஃபஸ் நகரத்தைச் சேர்ந்த போர்க்கலை நிபுணரான ஜெனரல் ஜீன் ஃப்ராங்கிஸ் அல்லார்டை தன் படைத்தளபதியாக நியமித்தார். இதன் மூலம் பிரிட்டிஷாருக்கு இணையாக தன் ராணுவ பலத்தைப் பெருக்கிக் கொண்டார். இதனால், அந்தக் காலத்திலேயே ரஞ்சித் சிங்கின் ராணுவம் அதி நவீன தடவாடங்களைக் கொண்டதாக இருந்தது. இப்படி, பல விதங்களில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டதால் `மிகச் சிறந்த தலைவர்' என்ற பெருமையை பி.பி.சி, ராஜா ரஞ்சித் சிங்குக்கு வழங்கியுள்ளது.

இது குறித்து பி.பி.சி வரலாற்று புத்தகத்தின் ஆசிரியர் மேட் எல்ட்டன் கூறுகையில், ``கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, ரஞ்சித் சிங் இந்தக் கால மக்களையும் கவர்ந்துள்ளார் என்பதையே இது காட்டுகிறது. பஞ்சாப்பில் அரசராக இவர் பொறுப்பேற்ற போது பொருளாதார பிரச்னை, அரசியல் நிலையற்றத்தன்மை நிலவியது.

ராஜா ரஞ்சித் சிங்
ராஜா ரஞ்சித் சிங்

இத்தகைய காலத்தில் ரஞ்சித் சிங்கின் ஆட்சி சகிப்புத்தன்மையுடன் விளங்கியது. மக்களுக்கு சுதந்திரம் அளிப்பதில் , ராணுவத்தை கட்டமைப்பதில் அவர் நிகரற்றவராக விளங்கினார். ரஞ்சித் சிங்கின் ஆட்சி பஞ்சாப் மற்றும் வட இந்தியாவின் பொற்கால ஆட்சி'' என்று கூறியுள்ளார்.