Published:Updated:

மும்பை: புறநகர் ரயில் விவகாரம்; சிவசேனா அரசு சர்வாதிகாரத்துடன் நடந்து கொள்வதாக பாஜக குற்றச்சாட்டு!

கைது செய்யப்படும் பாஜகவினர்
கைது செய்யப்படும் பாஜகவினர்

மும்பையில் புறநகர் ரயில் போக்குவரத்தைத் தொடங்காமல் மாநில அரசு சர்வாதிகாரத்துடன் நடந்து கொள்வதாகக்கூறி பாஜக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மும்பையில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக புறநகர் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படாமல் இருக்கின்றனர். இதனால் மும்பையின் புறநகர் பகுதியில் வசிக்கும் மக்கள் மும்பைக்குள் வந்து வேலை செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர். புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரி வருகின்றனர். சமீபத்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதில் புறநகர் ரயிலில் பயணம் செய்ய பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுபோன்ற அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

மும்பை: `காட்டிக்கொடுத்த ரத்தக்கறை!’ - பிறந்த தன் குழந்தையை 7-வது மாடியிலிருந்து வீசிய சிறுமி!
மும்பை ரயில்நிலையம்
மும்பை ரயில்நிலையம்

மும்பை உயர்நீதிமன்றமும் இரண்டு தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டவர்களை ஏன் புறநகர் ரயில்களில் அனுமதிக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பி இருந்தது. இதையடுத்து, "புறநகர் ரயிலில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து அரசு விரைவில் முடிவு செய்யும் என்றும், புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதிக்கவே மாட்டோம் என்று கூறவில்லை" என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்திருந்தார். மும்பையில் பாஜகவினர் புறநகர் ரயிலில் பொதுமக்களை அனுமதிக்கவேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்ச்கேட் ரயில் நிலையத்திற்குள் நுழைந்து இப்போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர். போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய பாஜக சட்ட மேலவை தலைவர் பிரவின் இது குறித்து பேசுகையில், "புறநகர் ரயில்களில் மக்களை பயணம் செய்ய அனுமதிக்க மறுப்பதன் மூலம் மக்கள் மீது மாநில அரசு சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. போலீஸார் மூலம் சர்வாதிகாரத்தை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் நாங்கள் சாமானிய மக்களுக்காக போராடுகிறோம். மாநில அரசு எங்களை போராடவும் அனுமதிப்பதில்லை. ரயிலில் மக்களையும் அனுமதிக்க மறுக்கிறது. இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்களை புறநகர் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கவேண்டும்" என்று தெரிவித்தார். மும்பை பாஜக தலைவர் பாய் ஜக்தாப்பும் மும்பை புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதனால் மாநில அரசு புறநகர் ரயிலில் பொதுமக்களை அனுமதிக்கவேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு