Published:Updated:

`கஞ்சா பயிரிட அனுமதிக்க வேண்டும்' - அரசிடம் கோரிக்கை வைத்த மகாராஷ்டிரா விவசாயி!

கஞ்சா செடி
கஞ்சா செடி

மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கஞ்சா பயிரிட்டு வளர்க்க அனுமதிக்க வேண்டும் என்று மாநில அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சோலாப்பூர் மாவட்டம், மொஹோல் பகுதியைச் சேர்ந்த அனில் பரப் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒரு விசித்திரமான கோரிக்கையை முன்வைத்திருக்கிறார். அந்த மனுவில், 'விவசாயப் பொருள்களுக்கு நிரந்தர விலை இருப்பதில்லை. இதனால் விவசாயத்தில் எப்போதும் நஷ்டம் ஏற்படுகிறது. சில நேரங்களில் செலவு செய்த பணம்கூட விவசாயத்தில் கிடைப்பதில்லை.

கஞ்சா செடி
கஞ்சா செடி
ரூ.684 கோடி மோசடி செய்த நேபாள் தொழிலதிபர்; மும்பை ஹோட்டலில் கைதானது எப்படி?

கரும்பு ஆலைகள், கரும்புக்கான பணத்தைக் கொடுக்க மறுக்கின்றன. கஞ்சாவுக்கு மார்க்கெட்டில் நல்ல விலை இருக்கிறது. எனவே, எனக்கு இருக்கும் இரண்டு ஏக்கர் நிலத்தில் செப். 15-ம் தேதிக்குள் கஞ்சா வளர்க்க அனுமதி கொடுக்கவில்லையெனில், 16-ம் தேதி அரசு அனுமதி கொடுத்ததாகக் கருதி எனது தோட்டத்தில் கஞ்சா பயிரிடுவேன். கஞ்சா பயிரிட்டதற்காக என்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டால், அதற்கு மாவட்ட நிர்வாகம்தான் பொறுப்பு' என்று தனது மனுவில் தெரிவித்திருக்கிறார். இந்த மனுவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாவட்ட நிர்வாகம் அந்த மனுவை போலீஸாருக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த இன்ஸ்பெக்டர் அசோக், ``விளம்பரத்துக்காக இப்படி மனு கொடுத்திருக்கிறார். விவசாயி சொன்னபடி கஞ்சா பயிரிட்டால் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்படும்’’ என்று தெரிவித்தார். போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்படி கஞ்சாவைப் பயிரிட தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் விவசாயிகள் விளைபொருள்களுக்கு சரியாக விலை கிடைக்காததாலும், விவசாயத்தில் ஏற்படும் நஷ்டம் காரணமாகவும் தற்கொலை செய்துவருகின்றனர். இரண்டு முறை அரசு, விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்திருக்கிறது.

விகடன் குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும்? சின்ன quiz...

விகடன்
விகடன்

விகடன் நிறுவனர் தினம்: Quizல் கலந்து கொள்ள க்ளிக் செய்க... https://bit.ly/3DjBBxi

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு