Published:Updated:

சிறுமியின் கழுத்தை 2 மணி நேரம் சுற்றி, பின் கடித்த நாகப்பாம்பு; சிகிச்சையில் உயிர் பிழைத்தார்!

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரமாக அந்தச் சிறுமி அசையாமல் இருந்துள்ளார். தொடர்ந்து ஒரே நிலையில் படுத்திருந்த அந்தச் சிறுமி, பயத்தால் கொஞ்சம் அசைய, நாகப்பாம்பு சிறுமியின் கையில் கடித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆறு வயதுச் சிறுமியின் கழுத்தை இரண்டு மணி நேரமாகச் சுற்றியிருந்த நாகப்பாம்பு, இறுதியில் அவரை கடித்தும்விட்டது. கடந்த வாரம் நடந்த இந்தச் சம்பவத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தச் சிறுமி, தற்போது அபாய கட்டத்தை தாண்டியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவைச் சேர்ந்த பூவா கட்காரி என்ற ஆறு வயதுச் சிறுமி தனது வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தை நாகப்பாம்பு ஒன்று சுற்றியுள்ளது.

பாம்பு (Representational Image)
பாம்பு (Representational Image)
மண்புழு மன்னாரு: பாம்பு கடித்தால் பயப்பட வேண்டாம்! இது  பாம்பு மனிதன்  சொல்லும் கதை!

அதனைக் கண்ட பதறித் துடித்த கட்காரியின் குடும்பத்தினர், காப்பாற்றும் நோக்கில் குழந்தையை நெருங்கினால் அது ஆபத்தில் முடியலாம் என்பதால், பாம்பு பிடிப்பவருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். பாம்பு கடித்துவிடாமல் இருக்க, பாம்பு பிடிப்பவர் வரும் வரை சிறுமியை அசையாமல் இருக்கச் சொன்னார்கள்.

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரமாக அந்தச் சிறுமி அசையாமல் இருந்துள்ளார். தொடர்ந்து ஒரே நிலையில் படுத்திருந்த அந்தச் சிறுமி, பயத்தால் கொஞ்சம் அசைய, நாகப்பாம்பு சிறுமியின் கையில் கடித்துள்ளது.

அதை தொடர்ந்து பாம்பை பிடித்த மக்கள், குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர். நான்கு நாள்களுக்குப் பின் கடந்த புதன்கிழமை சிறுமி அபாய கட்டத்தை தாண்டியுள்ளதாகச் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Snake (Representational Image)
Snake (Representational Image)
Image by Ayumi Jayatilake from Pixabay
வீட்டு பெயர் பலகையில் மகள், மருமகளுக்கும் இடம்; மகாராஷ்டிரா கிராம மக்களின் புது முயற்சி!

முன்னதாக, சிறுமியின் கழுத்தில் பாம்பு சுற்றியிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தது. பார்ப்பவர்களுக்கு பயத்தை உண்டாக்கும் வகையில் இருந்த அந்த வீடியோவில் சிறுமியின் கழுத்தை நாகப்பாம்பு சுற்றியிருப்பதும், அந்த சிறுமியின் முதுகு முழுவதும் அது படர்ந்திருப்பதும் தெரிகிறது. சிறுமி எந்த அசைவும் இல்லாமல் படுத்திருப்பதை பார்க்கும்போது, பதற்றமும் பரிதாபமும் எழுகிறது. பாம்பு படம் எடுக்க, பார்ப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் அந்தக் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு