Published:Updated:

வீட்டு பெயர் பலகையில் மகள், மருமகளுக்கும் இடம்; மகாராஷ்டிரா கிராம மக்களின் புது முயற்சி!

கிராமம் (Representational Image)
கிராமம் (Representational Image) ( Image by Dasagani Ramesh from Pixabay )

கர்பி, டோங்கர்காவ், நர்வத் உட்பட 10 கிராமங்களில் இந்த புதிய நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. வீட்டில் உள்ள மகள், மருமகள்களின் பெயர்கள் அந்த ஊர்களின் வீட்டுப் பெயர் பலகையில் எழுதப்படுகின்றன.

வீட்டின் பெயர் பலகையில் பொதுவாக ஆண்களின் பெயரே இருக்கும். அதில் ஆணாதிக்கமே ஓங்கி நிற்கும். எப்போதும் அதில் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கப்படுவதில்லை. ஆனால் மகாராஷ்டிரா கிராமம் ஒன்று, பெண்களுக்கு வீட்டுப் பெயர் பலகையில் முன்னுரிமை கொடுத்து பெருமைப்படுத்தி வருகிறது. நாண்டெட் மாவட்டத்தில் உள்ள 10 கிராமங்களில் இதுபோன்று பெண்களின் பெயர்களை வீட்டுப் பெயர் பலகையில் எழுதி இருக்கின்றனர். கர்பி, டோங்கர்காவ், நர்வத் உட்பட 10 கிராமங்களில் இந்த புதிய நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. வீட்டில் உள்ள மகள், மருமகள்களின் பெயர்கள் அந்த ஊர்களின் வீட்டுப் பெயர் பலகையில் எழுதப்படுகின்றன.

வீட்டிற்கு வெளியில் பெண்களின் பெயர் பலகை
வீட்டிற்கு வெளியில் பெண்களின் பெயர் பலகை
மத்திய அமைச்சரைக் கைதுசெய்ய உத்தரவிட்ட மகாராஷ்டிரா அமைச்சருக்கு அமலாக்கப் பிரிவு சம்மன்!

டோங்கர்காவ் என்ற கிராமத்தின் கிராம நிர்வாக அதிகாரி சந்தோஷ் இது குறித்துக் கூறுகையில், ``எங்களது கிராமத்தில் 452 வீடுகள் இருக்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும் மகள் அல்லது மருமகள் பெயர் கொண்ட பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு வித்தியாசமான உணர்வைத் தருகிறது. மகள் இல்லாத வீடுகளில் மருமகள் பெயரை பெயர் பலகையில் வைக்கும் படி கவுன்சலிங் கொடுத்து பெயர் பலகை வைக்க உதவுகிறோம்'' என்றார்.

இத்திட்டத்தை ஜில்லா பரிஷத் அதிகாரி வர்ஷா தாக்கூர் தொடங்கி வைத்தார். `என் மகள் எனது பெருமை' என்ற திட்டத்தின் கீழ் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து வர்ஷா கூறுகையில், ``கிராமங்களில் தெருக்கள் மற்றும் வீடுகள் ஆண் உறுப்பினர்களின் பெயரில்தான் அடையாளம் காணப்படுகின்றன. இந்த நடைமுறையை மாற்ற, பெண்கள் பெயரில் பெயர் பலகை வைக்கும்படி கேட்டுக்கொண்டோம். இப்போது வீடுகள் மகள் மற்றும் மருமகள் பெயரில் அடையாளம் காணப்படுகின்றன.

இத்திட்டத்தை பிரபலப்படுத்த ஜில்லா பரிஷத் நிர்வாகமே பெண்களின் பெயர் அடங்கிய பெயர் பலகையை குடும்பங்களுக்கு வழங்கியது. ஆரம்பத்தில் இரண்டு கிராமத்தில் இதனை தொடங்கியுள்ளோம்.. இத்திட்டம் பெண்களுக்கு எதிரான பாரபட்சத்தை தடுக்கவும், பெண் சிசுக்கொலையை தடுக்கவும், பெண்களுக்கு எதிரான அடக்கு முறையை தடுக்கவும் முதல் படியாக இருக்கும் என்று நினைக்கிறேன்'' என்று தெரிவித்தார்.

கிராமம் (Representational Image)
கிராமம் (Representational Image)
`நேரு, ஸ்டாலின் புகழாரம்; மத்திய அமைச்சர் கைது!' - சிவசேனா, பாஜக விரிசல் அதிகரிக்கிறதா?!

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு மிகவும் உதவிகரமாக இருந்த மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரி ரேகா கலாம் இது குறித்து கூறுகையில், ``இத்திட்டத்தை செயல்படுத்த கிராமங்களில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள், ஆசிரியர்கள், ஊர் பெரியவர்களிடம் பேசி சம்மதிக்க வைத்தோம். பெண்களின் பெயர் பலகையை வீட்டில் வைக்க முன் வருபவர்களுக்கு பாராட்டு விழா நடத்தினோம். இதன் மூலம் அதிகமானோர் தாங்களாகவே முன் வந்து குடும்பத்தில் உள்ள பெண்களின் பெயர்களை பெயர்ப் பலகையில் எழுதினர்" என்று கூறுகிறார்.

இத்திட்டத்தை படிப்படியாக மாவட்டம் முழுக்க விரிவுபடுத்த ஜில்லா பரிஷத் அதிகாரி வர்ஷா நடவடிக்கை எடுத்துள்ளார். இப்போது மாவட்டத்தில் உள்ள ஒன்பது தாலுகாவில் தலா இரண்டு கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு