Published:Updated:

மகிஷாசுரன் இடத்தில் `மகாத்மா காந்தி' சிலையா? - சர்ச்சையான துர்கா பூஜை விழா

மகிஷாசுரனின் இடத்தில் மகாத்மா காந்தியின் சிலை? ( ட்விட்டர் )

கொல்கத்தாவில் அகில பாரதிய இந்து மகாசபை ஏற்பாடு செய்திருந்த பூஜையில் மகிஷாசுரனின் இடத்தில் மகாத்மா காந்தி உருவம் போல் வடிவமைக்கப்பட்டிருந்த சிலையை வைத்திருந்தது சர்ச்சையாகியிருக்கிறது.

மகிஷாசுரன் இடத்தில் `மகாத்மா காந்தி' சிலையா? - சர்ச்சையான துர்கா பூஜை விழா

கொல்கத்தாவில் அகில பாரதிய இந்து மகாசபை ஏற்பாடு செய்திருந்த பூஜையில் மகிஷாசுரனின் இடத்தில் மகாத்மா காந்தி உருவம் போல் வடிவமைக்கப்பட்டிருந்த சிலையை வைத்திருந்தது சர்ச்சையாகியிருக்கிறது.

Published:Updated:
மகிஷாசுரனின் இடத்தில் மகாத்மா காந்தியின் சிலை? ( ட்விட்டர் )

கொல்கத்தாவின் தெற்குப் புறநகரில் உள்ள கஸ்பாவில் பாரதிய இந்து மகாசபை ஏற்பாட்டின் பேரில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் துர்கா பூஜையில் அலங்கரிக்கப்பட்ட துர்கா விக்கிரகத்தில் மகிஷாசுரன் இருக்கவேண்டிய இடத்தில் கண்ணாடி அணிந்து, கையில் தடியுடன் காந்தி போன்ற உருவ அமைப்பில் ஒரு சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை மாலை சிலர் இதை கவனித்து வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தனர். அதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக ​​அரசு நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.

மேலும், பூஜை அமைப்பாளர்கள் மகாத்மா காந்தியை அவமானப்படுத்துவதை நிறுத்தக் கோரி அரசியல் கட்சிகளிடருந்து எதிர்ப்புகள் வரத் தொடங்கியது. இது தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் அரசு நிர்வாகம் பேசியபோது ஏற்பாட்டாளர்கள் அந்த சிலையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர விரும்பவில்லை. ஆனால், அரசிடமிருந்து அழுத்தம் அதிகமானதற்குப் பிறகு கண்ணாடி அகற்றப்பட்டு, தலையில் விக் வைக்கப்பட்டது.

பூஜை
பூஜை
AbhiRP

இது தொடர்பாக பூஜை அமைப்பாளர்களில் ஒருவரான அகில பாரதிய இந்து மகாசபாவின் மாநிலத் தலைவர் சுந்தரகிரி மகாராஜ், ``உண்மையைப் பகிரங்கமாகப் பேச வேண்டிய நேரம் வந்திருக்கிறது. தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. இப்போது உண்மையைப் பேசுவது ஒவ்வோர் இந்துவின் கடமை என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார். மேலும், மற்றொரு பூஜை அமைப்பாளரான சந்திரச்சூர் கோஸ்வாமி, "எங்களுக்கு மிரட்டல் அழைப்புகள் வந்தன. மகிஷாசுரன் சிலையின் தோற்றத்தில் சில மாற்றங்களைச் செய்யாவிட்டால், பூஜையை மூடுவோம் என காவல்துறை நிர்வாகம் மிரட்டியது.

மகிஷாசுரனின் இடத்தில் மகாத்மா காந்தியின் சிலை?
மகிஷாசுரனின் இடத்தில் மகாத்மா காந்தியின் சிலை?
ட்விட்டர்

கடைசியாக, பதற்றத்தைத் தவிர்க்க சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியிருந்தது" என விளக்கமளித்தார். இதற்கிடையில், சிபிஐ-எம் பொலிட்பீரோ உறுப்பினரும், மேற்கு வங்காள மாநிலச் செயலாளருமான எம்.டி.சலீம், ``இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சந்தேகத்துக்கு இடமில்லாமல் மகாத்மா காந்தி, இந்துத்துவா வெறியரால் கொல்லப்பட்டார். இப்போது, ​​ஒவ்வொரு நாளும் காந்திய தத்துவத்தை படுகொலை செய்யும் முயற்சி நடக்கிறது. இது ஏராளமான மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் ஒரு திட்டமிட்ட முயற்சி" என்று தெரிவித்திருக்கிறார்.