Published:Updated:

இனி வாழைஇலை சாப்பாடுதான்...மஹிந்த்ரா குழுமத்தின் முடிவுக்குக் காரணம் என்ன?

வாழை இலையில் உணவு
வாழை இலையில் உணவு

தற்போது, வாழை விவசாயிகள் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் மஹிந்த்ரா குழும கேன்டீன்களில் உணவுகள் வாழை இலையில் வழங்கப்படுவதாக ஆனந்த் மஹிந்த்ரா தன் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பால் நாட்டில் பொருளாதாரம் முடங்கிக் கிடக்கிறது. பெரிய தொழில் நிறுவனங்கள் முதல் சாதாரண நிறுவனங்கள் வரை மூடிக்கிடக்கின்றன. விவசாயிகள் தங்கள் விளை பொருள்களைச் சந்தைக்கு அனுப்ப முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக , வாழை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விளையும் வாழைத் தார்கள், வாழை இலைகளைச் சந்தைக்கு அனுப்ப முடியாமல் தவிக்கும் விவசாயிகள் அவற்றை கால்நடைகளுக்கு உணவாக அளித்து வருகின்றனர். வாழை விவசாயிகளின் இழப்பைக் கருத்தில்கொண்டு, மஹிந்த்ரா குழும கேன்டீன்களில் இனிமேல் தட்டுகளுக்குப் பதிலாக வாழை இலைகளில் உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வாழை இலை சாப்பாடு
வாழை இலை சாப்பாடு

மஹிந்த்ரா குழுமத் தொழிற்சாலைகள் மூடப்பட்டாலும், இன்றியமையாத பிரிவுகள் இயங்கி வருகின்றன. அதில், சொற்பப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்குத் தொழிற்சாலை கேன்டீனில் உணவு வழங்கப்படுகின்றது. இது மட்டுமல்லாமல், இந்த கேன்டீன்கள் வழியாக உணவு தயாரிக்கப்பட்டு, வீதிகளில் உணவு கிடைக்காமல் தவிப்போருக்கும் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இடம்பெயர் தொழிலாளர்களுக்கும் இந்த கேன்டீன்களில் உணவுகள் வழங்கப்படுகின்றன. அனைவரும் சமூக இடைவெளி விட்டு அமரவைக்கப்பட்டு, சுத்தமான முறையில் உணவுகள் வழங்கப்படுகின்றன.

தற்போது, வாழை விவசாயிகள் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் மஹிந்த்ரா குழும கேன்டீன்களில் உணவுகள் வாழை இலைகளில் வழங்கப்படுவதாக ஆனந்த் மஹிந்த்ரா தன் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். 'மூத்த பத்திரிகையாளர் பத்மா ராமநாத் விவசாயிகள் படும் துயரம் குறித்து எனக்கு மெயில் வழியாகத் தெரிவித்திருந்தார். இதையடுத்து, நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

ஆனந்த்  மஹிந்த்ரா
ஆனந்த் மஹிந்த்ரா

தொழிற்சாலையில் பணி புரியும் ஒவ்வொருவருக்கும் தனித் தனி ஜக்குகள், டம்ளர்கள் கொடுத்து தண்ணீர் வழங்குகிறோம். இதனால், ஒருவர் தொடும் பொருள்களை மற்றவர் தொடும் அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளது' என்று ஆனந்த் மஹிந்த்ரா தன் பதிவில் தெரிவித்துள்ளார்.

`வீடு புகுந்து தடியடி.. போண்டாவைப் பறித்துச் சாப்பிட்டார்?!’ -சர்ச்சையில் பேரணாம்பட்டு தாசில்தார்

மஹிந்த்ரா குழும கேன்டீன்களில் தக்காளி சாதம், வெள்ளை சாதம், வெள்ளரிப் பிஞ்சுகள், ஊறுகாய், காய்கறிக் கூட்டுகள் உணவாக வழங்கப்பட்டு வருகின்றன. இதே உணவுப் பதார்த்தங்கள் சாலையோர மக்களுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு