Published:Updated:

காதலியைச் சந்திக்க பர்தா அணிந்து சென்ற இளைஞர்... கைதுசெய்த போலீஸ் - என்ன நடந்தது?

காதல்

காதலியைச் சந்திக்க பர்தா அணிந்து சென்ற இளைஞரை போலீஸார் கைதுசெய்தனர்.

காதலியைச் சந்திக்க பர்தா அணிந்து சென்ற இளைஞர்... கைதுசெய்த போலீஸ் - என்ன நடந்தது?

காதலியைச் சந்திக்க பர்தா அணிந்து சென்ற இளைஞரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
காதல்

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சைஃப் அலி (25). இவருக்கு வெளியூரில் வேலை கிடைத்திருக்கிறது. அதனால் வெளியூருக்கச் செல்வதற்கு முன்பு தன் காதலையைச் சந்திக்க ஆசைப்பட்ட அவர், சிதௌலி காவல் நிலையப் பகுதியில் உள்ள தன் காதலி வசிக்கும் மெஹ்மத்பூர் கிராமத்துக்குச் சென்றிருக்கிறார். அந்தப் பகுதியில் உள்ள சில நபர்களை அவருக்கு தெரியும் என்ற காரணத்தினால் தன்னுடைய அடையாளத்தை மறைப்பதற்காக பெண்கள் அணியும் பர்தாவை போட்டுக்கொண்டு தனது அடையாளத்தை மறைக்க முயற்சி செய்திருக்கிறார்.

காதலர்கள்
காதலர்கள்

பர்தா அணிந்து கொண்டு அந்தப் பெண் இருக்கும் பகுதிக்குச் சென்ற அவரை சிலர் சந்தேகத்துடன் பார்த்திருக்கின்றனர். இது மட்டுமல்லாமல் அவருடைய தோற்றம் உள்ளூர்வாசிகளுக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து, அங்கிருந்த மக்கள் இவரை பர்தாவை அகற்றுமாறு வற்புறுத்தியிருக்கிறார்கள்.

கைது
கைது

பர்தாவை கழற்ற மறுத்த அவர், சிறிது நேரம் கழித்து அதனை அகற்றியிருக்கிறார். அப்போது பர்தா அணிந்திருப்பது ஒரு ஆண் என கண்டறிந்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அவரைப் பிடித்து வைத்துக்கொண்டு போலீஸில் புகார் அளித்தனர். போலீஸாரும் அந்த இளைஞரைக் கைதுசெய்தனர். அமைதி மீறல் பிரிவுகளின் கீழ் அலி கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவத்தை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். அது தற்போது வைரலாகப் பரவி வருகிறது.