Published:Updated:

ஆக்ஸிஜன் இணைப்பைத் துண்டித்து தாயைக் கொல்ல முயற்சி! - சொத்துக்காக மகன் செய்த அதிர்ச்சி சம்பவம்

கொலை முயற்சி ( AP (மாதிரிப் புகைப்படம்) )

சொத்துக்காக நோய்வாய்ப்பட்ட தாயைக் கொல்ல முயன்ற மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆக்ஸிஜன் இணைப்பைத் துண்டித்து தாயைக் கொல்ல முயற்சி! - சொத்துக்காக மகன் செய்த அதிர்ச்சி சம்பவம்

சொத்துக்காக நோய்வாய்ப்பட்ட தாயைக் கொல்ல முயன்ற மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கொலை முயற்சி ( AP (மாதிரிப் புகைப்படம்) )

பெங்களூர் ஆர்.டி.நகர் 2-வது பிளாக்கில் கேத்தரின் டி குரூஸ் என்ற 80 வயதான பெண் தன் மகளுடன் வசித்துவருகிறார். இவருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள். அவர்களில் இரண்டு மகன்கள் அமெரிக்காவில் குடியேறிவிட்டனர். மூத்த மகனும், மகளும் பெங்களூரில் வசிக்கின்றனர். இந்த நிலையில், அவரது சொத்து அனைவருக்கும் பிரித்து கொடுக்கப்பட்டிருக்கிறது. மூத்த மகனுக்கு வழங்கப்பட்ட சொத்தின் ஒரு பகுதியான பெங்களூரு வீட்டில் அந்தப் பெண் வசித்துவந்தார்.

அமெரிக்காவில் இருக்கும் இரண்டு மகன்கள் ஓர் உதவியாளரைவைத்து தங்கள் தாயை கவனித்துவந்தார்கள். கேத்தரின் டி குரூஸ் மூச்சுத்திணறல் மற்றும் வயது முதிர்வின் காரணமாக நோய்வாய்பட்டிருக்கிறார். அதனால், அவர் ஆக்ஸிஜன் உதவியில் இருந்துவந்திருக்கிறார்.

இந்த நிலையில், கேத்தரின் டி குரூஸ் தங்கியிருக்கும் அந்த வீட்டை விரைவில் கைப்பற்ற 60 வயதான அவரின் மூத்த மகன் திட்டமிட்டிருக்கிறார். அதற்கான ஒரே வழி தன் தாயார் இறப்பதுதான் என முடிவு செய்த அவர், சில தினங்களுக்கு முன்பு தன் தாயார் தங்கியிருக்கும் அந்த வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவருக்கென பணியமர்த்தப்பட்ட உதவியாளரை வெளியே அனுப்பியிருக்கிறார்.

காவல்துறை
காவல்துறை

அதைத் தொடர்ந்து கேத்தரின் டி குரூஸுக்குப் பொருத்தப்பட்டிருந்த ஆக்ஸிஜனைத் துண்டித்திருக்கிறார். இதனால், மூச்சுத்திணறிய கேத்தரின் டி குரூஸ் அலறித் துடித்திருக்கிறார். அவரின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். மேலும், இது தொடர்பாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தவர்கள் அந்தப் பெண்ணின் மூத்த மகனை காவலர்களிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். சொத்துக்காக தாயைக் கொலைசெய்ய முயன்ற மகனின் செயல் அந்தப் பகுதியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.