Published:Updated:

உடலுறவின்போது மாரடைப்பு, இளைஞர் மரணம்; காரணம் என்ன?

Love Making ( pixabay )

`உடலுறவில் ஈடுபடும்போது மாரடைப்பு ஏற்படுவது அரிது. ஆனால், மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. இளைஞர்களிடம், கண்டறியப்படாத இதயநோய் பாதிப்பு இருக்கும்பட்சத்தில், கடினமான வேலைகளைச் செய்யும்போதோ, உடலுறவின்போதோ இப்படி நிகழலாம்.’

உடலுறவின்போது மாரடைப்பு, இளைஞர் மரணம்; காரணம் என்ன?

`உடலுறவில் ஈடுபடும்போது மாரடைப்பு ஏற்படுவது அரிது. ஆனால், மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. இளைஞர்களிடம், கண்டறியப்படாத இதயநோய் பாதிப்பு இருக்கும்பட்சத்தில், கடினமான வேலைகளைச் செய்யும்போதோ, உடலுறவின்போதோ இப்படி நிகழலாம்.’

Published:Updated:
Love Making ( pixabay )

தன் காதலியோடு உடலுறவில் ஈடுபட்டபோது, காதலன் இறந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

நாக்பூரை சேர்ந்த 28 வயதான இளைஞரும், அவர் காதலியான செவிலியரும் காதலித்து வந்தனர். மூன்று வருடங்களாக உறவில் உள்ளனர். முகநூலில் பழக்கமான இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

உடலுறவின்போது மாரடைப்பு, இளைஞர் மரணம்; காரணம் என்ன?
pixabay

இந்நிலையில், சமீபத்தில் அவர்கள் ஒரு ஹோட்டலில் உடலுறவில் ஈடுபட்டனர். அரை மணி நேரத்தில், எந்த அசைவும் இல்லாமல் காதலன் சரிந்து விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ந்துபோன காதலி, உடனடியாக லாட்ஜ் நிர்வாகத்தினரை உதவிக்கு அழைத்தார். உடனடியாக அந்த இளைஞர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரின் உயிர் பிரிந்தது அறிவிக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து காவல் துறை உதவி ஆய்வாளர் தெரிவிக்கையில், `இருவரும் உடலுறவில் இருந்தபோது, இளைஞர் சரிந்து நினைவில்லாமல் கீழே விழுந்ததாக அந்தப் பெண் கூறினார். அதோடு நாங்கள் ஆராய்ந்ததில், எந்த மருந்தும் இவர்கள் இருவரும் எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. தற்போது உள்ளுறுப்பு பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக பிரேத பரிசோதனையில் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து தற்செயலாக ஏற்பட்ட மரணம் என்று இந்த வழக்கு காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது’ எனக் கூறியுள்ளார். இன்னொரு பக்கம், சம்பந்தப்பட்ட இளைஞர் அதிகமாக வயாகரா பயன்படுத்தியதுதான் இதற்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

Heart attack
Heart attack

உடலுறவில் ஈடுபடும்போது மாரடைப்பு ஏற்படுமா?

`உடலுறவில் ஈடுபடும்போது மாரடைப்பு ஏற்படுவது அரிது. ஆனால், மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. இளைஞர்களிடம், கண்டறியப்படாத இதயநோய் பாதிப்பு இருக்கும்பட்சத்தில், கடினமான வேலைகளைச் செய்யும்போதோ, உடலுறவின்போதோ இப்படி நிகழலாம். கடினமான வேலைகளைச் செய்யும்போது, இதய தசைகளுக்கு அதிகப்படியான ரத்தமும் ஆக்சிஜனும் தேவைப்படும்’ என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதய அறுவைசிகிச்சை செய்திருந்தால், மாரடைப்பு ஏற்பட்டிருந்தால்...

இதய அறுவைசிகிச்சை செய்திருப்பவர்கள், மாரடைப்பு ஏற்பட்டிருப்பவர்கள் தாம்பத்ய உறவின்போது கவனிக்க வேண்டியவை...

* அறுவைசிகிச்சை/மாரடைப்புப் பின் மூன்று மாதங்கள் உறவு கூடாது.

* உறவுக்குப் போதுமான இடைவெளி கொடுக்க வேண்டும்.

Couple
Couple
Photo by Womanizer Toys on Unsplash

* உறவின்போது நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டால் நிறுத்திவிட வேண்டும்.

* விநோதமான முயற்சிகளை செய்யக் கூடாது.

* எப்போதும் தலையணைக்கு அடியில் சார்பிட்ரேட் (Sorbitrate), ஆஸ்பிரின் (Aspirin) போன்ற மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரையின்படி வைத்திருக்க வேண்டும்.