Published:Updated:

`ரயிலில் தொலைந்துபோன தந்தை; 7 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த மகன்!' - நெகிழ்ச்சி சம்பவம்

தந்தையை சந்தித்த ரதி ராம் பிரத்யபதி
தந்தையை சந்தித்த ரதி ராம் பிரத்யபதி ( malayala manorama )

அந்த முதியவரைக் காண ஒரு கிராமமே காத்திருந்துள்ளது.

ரயிலில் காணாமல்போன தன் தந்தையை ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, சந்தித்த அழகிய நெகிழ்ச்சி தருணம் கேரளாவில் நடந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ராம் சரண். இவர், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ரயிலில் பயணம் செய்தபோது குடும்பத்தைத் தவறவிட்டுள்ளார். அவர், காணாமல்போன தனது குடும்பத்தைத் தேடி பல இடங்களில் அலைந்து தேடியுள்ளார். ஆனால், ராம் சரணால் தன் குடும்பத்தைச் சென்றடைய முடியவில்லை. அதே போன்று, அவருடைய குடும்பத்தினரும், பல இடங்களில் தேடியும் ராம் சரண் கிடைக்கவில்லை. ஆனாலும் ராம் சரணின் குடும்பத்தினர், அவரைத் தேடுவதை நிறுத்தாமல் தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் தொலைந்துபோன ராம் சரண் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு, கேரள மாநிலம் வடகராவில் உள்ள, அரசு மருத்துவமனையில் இருந்து தணல் என்ற முதியோர்கள் தங்குமிடத்தை அடைந்துள்ளார்.

ரயில் பயணம்
ரயில் பயணம்

அப்போது, அந்த மையத்தில் அவருடைய குடும்பம், உறவினர்கள் மற்றும் வீடு, நிலம் பற்றி தெளிவில்லாத ஒரு தகவலை அங்குள்ளவர்களிடம் பகிர்ந்துள்ளார். கிட்டத்தட்ட அவர் காணாமல் போய் ஏழு வருடங்கள் ஆன நிலையில், தணல் மையம் அந்த முதியவரை, குடும்பத்தினருடன் சேர்த்து வைக்க முடிவெடுத்துள்ளது. அதையடுத்து, அந்தப் பெரியவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையும் தணல் மைய பிரதிநிதிகளும், அவரின் உறவினர்களைத் தேடியுள்ளனர். இறுதியில் முதியவரின் குடும்பம் மத்தியப் பிரதேசத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து ,அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்குத் தகவல் தெவிக்கப்பட்ட நிலையில், அந்த முதியவரின் மகன் ரதி ராம் பிரத்யபதியும், தன் தந்தையைத் தேடி கேரளா வந்துள்ளார். காவல்துறையும் அவருடைய மகனும் தணல் மையத்தை அடைந்த நிலையில், அங்கு இருப்பது தன் தந்தைதான் என ரதி ராம் பிரத்யபதி உறுதிசெய்துள்ளார். காணாமல்போன தந்தையை ஏழு வருடங்களுக்குப் பிறகு பார்த்ததும் நெகிழ்ச்சியில் ரதி ராம் பிரத்யபதி கண்கலங்கியுள்ளார்.

கேரளா
கேரளா

இதையடுத்து தன் தந்தையை அழைத்துக்கொண்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள அவருடைய கிராமதந்துக்குச் சென்றுள்ளார். அங்கு அந்த முதியவரைக் காண ஒரு கிராமமே காத்திருந்துள்ளது. காணாமல் போன முதியவரைக் கண்டதும் அவருடைய குடும்பத்தினரும் உறவினர்களும் நெகிழ்ந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு