Published:Updated:

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 6 மாதக் குழந்தை; உயிர் காக்க தந்தை செய்த செயல்! - நெகிழ்ச்சி சம்பவம்

உயிர் காக்க தந்தை செய்த செயல்

குழந்தையின் உயிரைக் காக்க தந்தை எடுத்த முடிவு பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது.

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 6 மாதக் குழந்தை; உயிர் காக்க தந்தை செய்த செயல்! - நெகிழ்ச்சி சம்பவம்

குழந்தையின் உயிரைக் காக்க தந்தை எடுத்த முடிவு பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது.

Published:Updated:
உயிர் காக்க தந்தை செய்த செயல்

மேற்கு வங்கத்தில் வசிப்பவர் சூரஜ் பப்ஷா. இவரின் ஆறு மாதக் குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்தபோது, குழந்தைக்கு `பிலியரி அட்ரேசியா' என்ற கல்லீரல் நோய் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நோய் 12,000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்குத்தான் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. அந்தக் குழந்தைக்குக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தாகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அந்த அறுவை சிகிச்சைக்கு 15 லட்சம் ரூபாய் செலவாகும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

உடனே சூரஜ் பப்ஷா அவருக்குச் சொந்தமாக கொல்கத்தாவில் இருந்த நிலத்தை விற்றுப் பணத்தைக் கொடுத்திருக்கிறார். ஆனால், அறுவை சிகிச்சைக்கான கல்லீரல் கிடைக்கவில்லை என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். செய்வதறியாது கலங்கி நின்ற சூரஜ் பப்ஷா, ``டாக்டர் என் கல்லீரல் என் மகனுக்கு பொருந்துமா... அதை மட்டும் சோதித்துப் பாருங்களேன். நானே என் மகனுக்காகக் கல்லீரல் கொடுத்துவிடுகிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை

அதைத் தொடர்ந்து மருத்துவர்கள், அவரைப் பரிசோதித்த பின்னர் இருவருக்கும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய தீர்மானிக்கப்பட்டது. ஆகஸ்ட் 23 -ம் தேதியன்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் 12 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, குழந்தைக்கு தந்தையின் கல்லீரலை பொருத்தினார்கள். இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய சூரக் பாப்ஷா, ``என் மகன் இப்போது நல்லபடியாக உயிருடன் இருக்கிறான்... இதுதான் எனக்கு முக்கியம்” என்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
அப்பா
அப்பா

அமெரிக்காவைத் தளமாகக்கொண்ட ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், ``பிலியரி அட்ரேசியா என்பது கல்லீரலிலிருந்து பித்தப்பைக்கு பித்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் ஏற்படும் அடைப்பு. கல்லீரலின் உள்ளேயோ அல்லது வெளியேயோ உள்ள குழாய்கள் தானாக உருவாகாதபோது இந்த நோய் ஏற்படுகிறது. மேலும், இந்த பிலியரி அமைப்பு ஏன் சாதாரணமாக உருவாகத் தவறுகிறது என்பது தெரியவில்லை" எனத் தெரிவித்திருக்கிறது.

குழந்தையின் உயிரைக் காக்க தந்தை எடுத்த முடிவு பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது.