Published:Updated:

உ.பி: `அரசு வேலை கிடைக்கவில்லை’ - வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்; யமுனை ஆற்றில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்?!

தற்கொலை ( சித்திரிப்புப் படம் )

உத்தரப்பிரதேசத்தில் அரசு வேலை கிடைக்காத வேதனையில் இளைஞர் ஒருவர் யமுனை ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உ.பி: `அரசு வேலை கிடைக்கவில்லை’ - வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்; யமுனை ஆற்றில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்?!

உத்தரப்பிரதேசத்தில் அரசு வேலை கிடைக்காத வேதனையில் இளைஞர் ஒருவர் யமுனை ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
தற்கொலை ( சித்திரிப்புப் படம் )

உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ரா நகரின் நக்லா தல்ஃபி பகுதியை சேர்ந்த இளைஞர் கர்மவீர் சிங். இவர் கடந்த சில ஆண்டுகளாகவே அரசு வேலையில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் வேலைக்காக முயன்று வந்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தில் சேர்வதற்காகவும் முயன்றிருக்கிறார். ஆனால், அவருக்கு அரசு வேலை கிடைக்கவில்லை.

இந்த நிலையில், தனக்கு வேலை கிடைக்கவில்லை என்ற மன உளைச்சலில் இருந்த கர்மவீர் சிங் நேற்று முன்தினம் யமுனை ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்கிறேன் எனத் தனது வாட்ஸ்அப்பில் ஸ்டேடஸ் வைத்திருக்கிறார். இதைப் பார்த்த அவரின் குடும்பத்தார், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

இந்த நிலையில், இது தொடர்பாக, ஆக்ரா போலீஸ் நிலையத்தின் சார்பில், ``ஞாயிற்றுக்கிழமை இரவு யமுனை ஆற்றில் குதிப்பதற்கு முன்பு கர்மவீர் சிங் என்ற இளைஞர் தனக்கு அரசு வேலை கிடைக்கவில்லை, அதனால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக அவர் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் குறிப்பிட்டிருக்கிறார். இதையடுத்து அவர், யமுனை ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இளைஞரின் உடல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. யமுனை ஆற்றில் போலீஸார் அவரைத் தேடிவருகின்றனர். ஆற்றின் கரையில் கர்மவீரின் செருப்பு மற்றும் செல்போனைக் கண்டுபிடித்தனர்'' என்றார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!