Published:Updated:

சண்டிகர்: சிபிஐ அதிகாரி போல நடித்து மிரட்டிப் பணம் பறிக்க முயற்சி - ஒருவர் கைது!

கைது
News
கைது

சண்டிகரில் சிபிஐ அதிகாரியைப் போல நடித்து மிரட்டி ரூ.1 லட்சம் பணம் பறிக்க முயன்ற நபர் கைதுசெய்யப்பட்டார்.

சண்டிகர்: சிபிஐ அதிகாரி போல நடித்து மிரட்டிப் பணம் பறிக்க முயற்சி - ஒருவர் கைது!

சண்டிகரில் சிபிஐ அதிகாரியைப் போல நடித்து மிரட்டி ரூ.1 லட்சம் பணம் பறிக்க முயன்ற நபர் கைதுசெய்யப்பட்டார்.

Published:Updated:
கைது
News
கைது

சண்டிகரில் சி.பி.ஐ அதிகாரிகள் போல் நடித்து பஞ்ச்குலா பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் பறிக்க முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பாபன் ஜைதி என்பவர், ``காலை 11:30 மணியளவில் மூன்று பேர் எனது வீட்டுக்கு வந்தனர். சில கோப்புகளை எடுத்து வந்த ஒருவர் தன்னை சி.பி.ஐ துணை ஆணையர் டேனிஷ் இக்பால் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். மேலும், `டெல்லியில் சில முக்கியமான வழக்குகளில் உங்கள் பெயர் அடிபடுகிறது. அது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்' எனக் கூறினார்கள்.

கைது
கைது

இக்பாலுடன் வந்த ஒருவர் தன்னை உள்ளூர் போலீஸ்காரர் எனவும், மற்றொருவர் சி.பி.ஐ அதிகாரி எனவும் கூறி அறிமுகம் செய்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் என்னிடம் விசாரணை நடத்தினர். பின்னர், இக்பால் என்னிடம் `ஆயுள் தண்டனையை அனுபவிக்க நேரிடும். இதனால் குற்றச்சாட்டுகளை மறைக்க ரூ.1 லட்சம் தர வேண்டும்' என மிரட்டினார். அதையடுத்து அவர்கள் மேல் எனக்கு சந்தேகம் எழுந்தது. அதனால், நான் அவர்களிடம் பேச்சுக்கொடுத்தபடியே போலீஸுக்குத் தகவல் தெரிவித்தேன். போலீஸார் உடனடியாக இங்கு வந்தார்கள். உடனே அந்த நபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டனர்" எனக் கூறினார்.

பாபன் ஜைதியின் புகார் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், அவரை ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற கும்பலைச் சேர்ந்த ஒருவரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர்.