Published:Updated:

காதலித்த குற்றத்துக்காக ஓடும் பேருந்தில் தள்ளி கொல்லப்பட்ட இளைஞர்! - இளம்பெண் வீட்டார் வெறிச்செயல்

க்ரைம் - கொலை

பேருந்தில் தள்ளிவிட்டு இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காதலித்த குற்றத்துக்காக ஓடும் பேருந்தில் தள்ளி கொல்லப்பட்ட இளைஞர்! - இளம்பெண் வீட்டார் வெறிச்செயல்

பேருந்தில் தள்ளிவிட்டு இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
க்ரைம் - கொலை

பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில் கதாரா போலீஸ் அவுட்போஸ்ட் பகுதியில் வசிக்கும் ரௌஷன் குமார் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து வந்திருக்கிறார். உறவினர்களான இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனாலும் காதலுக்கு இருவர் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அதனால் காதலர்கள் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருக்கிறார்கள். அதன்படி செப்டம்பர் 29-ம் தேதியன்று வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்கள்.

கொலை
கொலை

அதைத் தொடர்ந்து, இருவரையும் தேடி வந்த பெண் வீட்டார், கடந்த வெள்ளிக்கிழமை அவர்கள் இருவரையும் ஹாஜிபூர் அருகே கண்டுபிடித்திருக்கிறார்கள். இருவரிடமும் அன்பாகப் பேசி திருமணம் செய்துவைப்பதாகக் கூறி காரில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். பின்னர் முசாபர்பூரில் உள்ள ஃபகுலி சௌக் அருகே தாங்கள் சென்ற ஸ்கார்பியோவை நிறுத்தி, ரௌஷன் குமாரை மட்டும் கீழே இறங்க கூறியவர்கள், அவரை அருகிலுள்ள பரபரப்பான சந்துக்கு அழைத்துச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.

சாலையை பாதுகாப்பாக கடக்க உதவுகிறேன் என்ற சாக்கில் அவர்கள் ரௌஷன் குமாரின் கைகளை பிடித்திருக்கிறார்கள்.

காவல்துறை
காவல்துறை

அப்போது எதிர்பாராத நேரத்தில் எதிரே வேகமாக வந்த பேருந்தில் அவர்கள் தள்ளிவிட்டதில், தூக்கிவீசப்பட்ட ரௌஷன் குமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த போலீஸார், இதுவரை 3 பேரைக் கைதுசெய்துள்ளனர்.