Published:Updated:

`பலாப்பழம் விழுந்ததால் ஏற்பட்ட கழுத்து முறிவு' - பரிசோதனையில் கொரோனா உறுதியான சோகம்

jackfruit tree
jackfruit tree

கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் பலாப்பழம் பறிக்க மரத்தில் ஏறியபோது தவறிவிழுந்தார். அப்போது அவரது தலையில் பலாப்பழம் விழுந்ததில் கழுத்து எலும்பு முறிந்தது.

கேரளாவை அச்சுறுத்திய கொரோனா பாதிப்பை அந்த மாநில அரசு தீவிர நடவடிக்கை மூலம் கட்டுக்குள் கொண்டு வந்தது. மாநிலத்தில் வேகமாகப் பரவிய கொரோனாவை கட்டுப்படுத்தியதால், நாட்டின் மொத்த கவனமும் கேரளாமீது விழுந்தது. சில மாநில அரசுகள் கேரளாவின் உதவியைக் கோரின. 

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டதுடன், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கிய பின்னர், கேரளாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. அங்கு தற்போது 322 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஓசி சைக்கிள்.. இரவில் பயணம்! -கேரளா டு கொல்கத்தா பயணமான கட்டுமானத் தொழிலாளி

வைரஸ் அறிகுறி இல்லாமலே கொரோனா பாதிப்பு ஏற்படுவது மற்றும் யாரிடம் இருந்து அல்லது எங்கிருந்து பரவியது என்பது தெரியாமலே இருப்பது போன்ற சம்பவங்கள் கேரள அரசை அச்சுறுத்தத் தொடங்கியிருக்கின்றன. சில தினங்களுக்கு முன்பு, கண்ணூர் மாவட்டத்தின் பழங்குடியினப் பெண் கொரோனாவால் பாதிப்படைந்தார். அவருக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என்பது தெரியவில்லை.

துபாயிலிருந்து திரும்பிய 29வது நாளில் இளைஞருக்குக் கொரோனா பாசிட்டிவ்! - அதிர்ச்சியில் கேரளா

இந்த நிலையில், காசர்கோடு மாவட்டம் பேலூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவர் வெளியிடம், வெளி மாநிலம் எங்கும் சென்றவரில்லை. வெளியாட்களுடன் தொடர்பில் இருந்தவரும் கிடையாது. அதனால் எங்கிருந்து நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது தெரியாமல் மருத்துவர்கள் கவலை அடைந்திருக்கிறார்கள்.

கண்ணூர் மாவட்டத்தின் பரியாராம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளரான டாக்டர்.கே.சுதீப் கூறுகையில், ``இரு தினங்களுக்கு முன்பு ஒருவர் கழுத்து எலும்பு முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பலாப்பழம் பறிக்க மரத்தில் ஏறியபோது தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது பழம் அவரது தலையில் விழுந்ததில் எலும்பு முறிந்துவிட்டது.

நாள் ஒன்றுக்கு ஒரு கொரோனா நோயாளிக்கு ரூ.25,000 செலவு! -கேரள அரசு தகவல்

உடனடியாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டியதிருந்ததால், மருத்துவ வழக்கப்படி அவருக்கு கொரோனா பரிசோதனை எடுத்தோம். அதில் அவருக்கு பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துவிட்டது. அவர் எங்கிருந்து நோய்த் தொற்று பெற்றார் என்பது புரியவில்லை. அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்றார். 

பலாப்பழம் விழுந்து சிகிச்சைக்குச் சென்ற இடத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்ததால் அந்த நபரின் உறவினர்கள் கலக்கம் அடைந்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு