Published:Updated:

இந்தூர்: `என்கிட்ட பாம் இருக்கு’... விமானத்தைத் தவறவிட்ட குடும்பம் - கடைசியில் ட்விஸ்ட்!

விமான நிலையம் ( மாதிரி படம் )

இந்தூர் விமான நிலையத்தில் ஒரு நபர் தன் மகளிடம் கூறிய விளையாட்டுத்தனமான பொய்யால் விமானத்தைத் தவறவிட்டிருக்கிறார்.

இந்தூர்: `என்கிட்ட பாம் இருக்கு’... விமானத்தைத் தவறவிட்ட குடும்பம் - கடைசியில் ட்விஸ்ட்!

இந்தூர் விமான நிலையத்தில் ஒரு நபர் தன் மகளிடம் கூறிய விளையாட்டுத்தனமான பொய்யால் விமானத்தைத் தவறவிட்டிருக்கிறார்.

Published:Updated:
விமான நிலையம் ( மாதிரி படம் )

மக்கள் அதிக அளவில் கூடும் பொது இடங்கள், அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் விமான நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களில் வெடிகுண்டு கொண்டுசெல்வது மட்டுமல்ல, விளையாட்டாக `என்னிடம் வெடிகுண்டு இருக்கிறது’ என்றுகூடப் பேசக் கூடாது. அப்படி, இந்தூர் விமான நிலையத்தில் ஒரு நபர் தன் மகளிடம் கூறிய இது போன்ற விளையாட்டுத்தனமான பொய்யால் விமானத்தைத் தவறவிட்டிருக்கிறார்.

விமான நிலையம்
விமான நிலையம்

கடந்த திங்கள்கிழமை இரவு நடந்தாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில், ஒரு நபர் தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் இந்தூர் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்திருக்கிறார். அப்போது விமான நிலையத்தில் தன் மகளுடன் விளையாடிக்கொண்டிருந்த தந்தை, தன்னுடைய பையில் வெடிகுண்டு இருப்பதாக விளையாட்டாகக் கூறியிருக்கிறார். இதைக் கேட்ட விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அவர்களின் உடைமைகளைப் பரிசோதனை செய்து, விசாரணை நடத்தினர். இதன் காரணமாக அவர்கள் தாங்கள் செல்லவேண்டிய விமானத்தையும் தவறவிட்டனர்.

விமான நிலையம்
விமான நிலையம்
மாதிரி படம்

பின்னர் இது குறித்துப் பேசிய விமான நிலைய இயக்குநர் சி.வி.ரவீந்திரன், ``அவர்களது உடைமையில் சந்தேகத்துக்குரியதாக எதுவும் இல்லை. அதுமட்டுமல்லாமல், தன்னுடைய பொறுப்பற்ற செயலுக்காக அந்த நபர் மன்னிப்பும் கேட்டார். இருப்பினும், பரிசோதனை மற்றும் விசாரணை காரணமாக மூவரும் தங்கள் விமானத்தைத் தவறவிட்டனர்" என்று கூறினார். மேலும், அவர்கள் `எழுத்துபூர்வமாக மன்னிப்புக் கேட்ட பிறகே பாதுகாப்புப் படை அதிகாரிகளால் விமான நிலையத்தைவிட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக காவல்துறையிடம் விசாரணைக்காக அவர்கள் ஒப்படைக்கப்படவில்லை' என்றும் ஏரோட்ரோம் காவல் நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.