Published:Updated:

காணாமல் போன டி-சர்ட்; இடமாற்றம் செய்யப்பட்ட போலீஸ் - சித்தார்த்தா மரணத்தில் தொடரும் சர்ச்சை

சித்தார்த்தா

ஆற்றில் மூழ்கியதால்தான் சித்தார்த்தா உயிரிழந்தார் என உடற்கூறாய்வு அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் அவரது இறப்பில் தொடர்ந்து சர்ச்சை நீடித்து வருகிறது.

காணாமல் போன டி-சர்ட்; இடமாற்றம் செய்யப்பட்ட போலீஸ் - சித்தார்த்தா மரணத்தில் தொடரும் சர்ச்சை

ஆற்றில் மூழ்கியதால்தான் சித்தார்த்தா உயிரிழந்தார் என உடற்கூறாய்வு அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் அவரது இறப்பில் தொடர்ந்து சர்ச்சை நீடித்து வருகிறது.

Published:Updated:
சித்தார்த்தா

கடந்த ஒரு மாதமாக கர்நாடகாவில் தொடர்ந்து பல்வேறு சிக்கல்கள், குழப்பங்கள், பிரச்னைகள் என ஏதாவது ஒன்று நடந்த வண்ணமே உள்ளது. காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததில் தொடங்கிய சர்ச்சை, அடுத்ததாக நம்பிக்கை வாக்கெடுப்பு, ஆட்சி மாற்றம், எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் என நீண்டுகொண்டே சென்றது. இவை அனைத்தும் சற்று தணிந்தது என எண்ணுவதற்குள் அடுத்ததாக ஒரு குண்டு வெடித்தது. பிரபல காஃபி டே நிறுவனத்தின் உரிமையாளரான சித்தார்த்தா காணாமல் போனார். கடந்த செவ்வாய்க் கிழமை மாலை மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்றுக்கு அருகில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட சித்தார்த்தாவின் உடல், மறு நாள் காலை அதே நேத்ராவதி நதியின் கரையில் கிடைத்தது.

சித்தார்த்தாவின் உடல்
சித்தார்த்தாவின் உடல்
Twitter/@rvaidya2000

பெரும் தொழிலதிபரும், கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகனுமான சித்தார்த்தா, காணாமல் போன பிறகு அவரை தேடும் பணிகளும், அவர் காணாமல் போனதற்கான காரணத்தைக் கண்டறியும் விசாரணைகளும் முடுக்கிவிடப்பட்டன. சித்தாத்தா மரணம் தொடர்பான விசாரணையில் முக்கிய பங்காற்றியவர் மங்களூரு துணை கமிஷனர் சந்தீப் படேல். காஃபி டே உரிமையாளர் எழுதியாக கூறப்படும் கடிதம், அவரின் உடலைத் தேடும் பணிகள் போன்றவற்றை மிகவும் வேகமாக நடத்தினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதைத்தொடர்ந்து, கடந்த இரண்டு நாள்களாக கர்நாடகாவில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் பணிகள் நடந்து வந்தன. அதில் மங்களூரு துணை கமிஷனரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிதாக ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் இது போன்ற இடமாற்றங்கள் இருப்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் சித்தார்த்தா இறந்த மறுநாளே, அவரின் வழக்கை விசாரித்து வரும் சந்தீப் படேல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது. மேலும், இடமாற்றம் செய்யப்பட்ட பிறகு இரண்டு ஐ.பி.எஸ் அதிகாரிகளின் இடமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளதும் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.

சந்தீப் படேல்
சந்தீப் படேல்
ANI

பெங்களூருவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சந்தீப் படேல், சித்தார்த்தா மரணம் பற்றிச் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். “சித்தார்த்தாவின் மரணத்தில் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரின் உயிரிழப்புக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனால் ஆற்றங்கரையிலிருந்த சித்தார்த்தாவின் உடலில் அவர் அணிந்திருந்த டி-சர்ட் இல்லை. இது சற்று சந்தேகத்தைக் கிளப்புகிறது. தற்கொலை செய்துகொண்டிருந்தால் டி-சர்ட் எங்கே சென்றிருக்கும். இந்த அடிப்படையில் பார்த்தால் அவர் மரணம் தற்கொலை இல்லை என்றே தோன்றுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism