Published:Updated:

"சிறுமியின் எதிர்காலம் வண்ணமயமாக இருக்க வேண்டும்"- உறுதியளித்தபடி உதவிய மணிப்பூர் அமைச்சர்

சிறுமியின் குடும்பத்தைச் சந்தித்த அமைச்சர்.

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 10 வயதான சிறுமி கைக்குழந்தையான தனது தங்கையை மடியில் சுமந்தபடி பள்ளிக்கு வந்த சம்பவம் காண்போர் மனதை நெகிழச் செய்தது.

கடந்த மாதம் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 10 வயதான மெய்னிங்சின்லியு (Meiningsinliu) என்ற சிறுமி கைக்குழந்தையான தனது தங்கையை மடியில் சுமந்தபடி பள்ளிக்கு வந்த சம்பவம் காண்போர் மனதை நெகிழச் செய்தது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதைக் கண்ட மணிப்பூரின் அமைச்சர் த.பிஸ்வஜித் சிங் (Th.Biswajit Singh) அந்தச் சிறுமியின் குடும்பத்தை நேரில் அழைத்து சிறுமியின் கல்விக்கான மொத்தச் செலவையும் தானே ஏற்பதாக உறுதியளித்திருந்தார்.

தற்போது அவர் உறுதியளித்தபடி அச்சிறுமியை மணிப்பூரின் தலைநகரான இம்பால் பகுதியில் உள்ள ஸ்லோப்லேண்ட் பப்ளிக் (Slopeland Public School) பள்ளியில் படிக்க ஏற்பாடு செய்துள்ளார். இதை ட்விட்டரில் பதிவிட்ட அமைச்சர் த.பிஸ்வஜித் சிங், "உறுதியளித்தபடி, இம்பாலில் உள்ள ஸ்லோப்லேண்ட் பப்ளிக் பள்ளியில் படிக்க ஏற்பாடு செய்துள்ளேன். சிறுமியின் எதிர்காலம் வண்ணமயமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். உறுதியளித்தபடி நிறைவேற்றிக் காட்டிய அமைச்சருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism