Published:Updated:

`நேருவின் எதிர்மறை, பா.ஜ.க-வின் சின்னம் என்ன?’ - சர்ச்சையை ஏற்படுத்திய மணிப்பூர் பொதுத்தேர்வு

கேள்விகள்
கேள்விகள்

``இதேபோல இதற்கு முன்னரும் கேள்விகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் சின்னம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சின்னம் ஆகியவற்றை வரையும்படி அதில் கேட்கப்பட்டது” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வானது கடந்த பிப்ரவரி 14-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பொலிட்டிக்கல் சயின்ஸ் என்ற பாடத்துக்கான தேர்வு கடந்த பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற்றுள்ளது. இந்தப் பாடத்தின் வினாத்தாளில் `பா.ஜ.க-வின் தேர்தல் சின்னத்தை வரைக’, `நேரு தேசத்தைக் கட்டமைத்ததில் எடுத்த முடிவுகளில் உள்ள நான்கு எதிர்வினைகளைக் குறிப்பிடுக’ ஆகிய கேள்விகள் இடம்பெற்றுள்ளன. இந்த வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இதுதொடர்பாக பா.ஜ.க-வின் செய்தித்தொடர்பாளர் சோங்தம் பிஜோய் பேசும்போது, ``பொதுத்தேர்வின் வினாத்தாள்களில் கேள்விகளைத் தேர்வு செய்வது தொடர்பாக எந்த நடவடிக்கையிலும் நாங்கள் ஈடுபடவில்லை. வினாத்தாளை தயாரித்த அதிகாரிகளிடம்தான் இந்தக் கேள்விகளைப் பற்றி நீங்கள் கேட்க வேண்டும்” என்று கூறியுள்ளார். ஆனால், பா.ஜ.க-வின் மாநில தலைவர் நிம்பஸ் சிங், ``நேரு பற்றி கேட்கப்பட்ட கேள்வியில் எந்தத் தவறும் இல்லை. இந்தியாவைக் கட்டமைப்பதில் முதல் பிரதமராக இருந்த நேரு முக்கிய பங்காற்றியுள்ளார். இதனடிப்படையில் நேர்மறையான கருத்துகளும் எதிர்மறையான கருத்துகளும் இருக்கும்” என்று கூறியுள்ளார்.

`கல்வி, செல்வத்தால் ஆணவம் வருகிறது; விவாகரத்து நடக்கிறது!' - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

பொலிட்டிக்கல் சயின்ஸ் பாடத்திட்டத்தில் உள்ள, ``இந்தியாவில் கட்சிகளின் அமைப்பு” என்ற பகுதியிலிருந்துதான் தேர்வு கட்டுப்பாட்டாளர் இந்தக் கேள்விகளை வடிவமைத்துள்ளார் என மேல்நிலைப்பள்ளிகள் கவுன்சிலின் தலைவர் மகேந்திர சிங் கூறியுள்ளார். மேலும், பெயரைக் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் பேசும்போது, ``இதேபோல இதற்கு முன்னரும் கேள்விகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் சின்னம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சின்னம் ஆகியவற்றை வரையும்படி அதில் கேட்கப்பட்டது” என்றார்.

தேர்வு
தேர்வு
pixabay

இதைக் குறித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜோய்கிஷன், ``மாணவர்களின் மத்தியில் அரசியல் சார்ந்து ஒரு குறிப்பிட்ட மனநிலையை ஏற்படுத்துவதாக இந்தக் கேள்வித்தாள் உள்ளது” எனக் கூறியுள்ளார்.

இந்தக் கேள்வித்தாளை சோரோகைபம் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் இந்தக் கேள்வித்தாள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். ``கேள்வியில் எந்தத் தவறும் இல்லை, முற்றிலுமாக வெட்கப்பட வேண்டிய விஷயம்” போன்ற கலவையான கமென்டுகளால் நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

"தேர்வு விடைத்தாளில் ரூ.100  மட்டும் வையுங்கள்!" - உ.பி பள்ளி முதல்வரின் சர்ச்சைக்குரிய பேச்சு  
அடுத்த கட்டுரைக்கு