Published:Updated:

`அவர் பூங்காவில் உள்ள விலங்கல்ல!' - மன்மோகன் சிங் படத்தை அமைச்சர் வெளியிட்டதற்கு மகள் கண்டனம்

கடும் விமர்சனங்களுக்குப் பிறகு இந்தப் புகைப்படங்கள் அமைச்சரின் ட்விட்டர் அக்கவுன்ட்டிலிருந்து நேற்று நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த புதன் கிழமையன்று திடீர் உடல் நலக்குறைவால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா நேற்று மன்மோகன் சிங்கை நேரில் நலம் விசாரிக்கச் சென்ற போது நடந்துகொண்ட விதம், தற்போது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

மன்சுக் மாண்டவியா
மன்சுக் மாண்டவியா
தாராளமயத்தின் 30 ஆண்டுகள் - 1: நரசிம்ம ராவ் - மன்மோகன் சிங் கூட்டணியும், பொருளாதார சுதந்திரமும்!

மன்மோகன் சிங்கை சந்திக்கச் சென்ற அமைச்சர், தன்னுடன் ஒரு புகைப்படக்காரரையும் அழைத்துச் சென்றுள்ளார். மன்மோகன் சிங்கின் மனைவி அந்தப் புகைப்படக்காரருக்கு அனுமதி மறுத்தும்கூட, அவர் புகைப்படம் எடுத்துள்ளார். அதை நாகரிகமின்றி அமைச்சர் அவரது ட்விட்டர் அக்கவுன்ட்டிலும் வெளியிட்டிருக்கிறார். இதற்கு கடும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

இதுகுறித்து மன்மோகன் சிங்கின் மகள் தமன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``என் தந்தை டெங்கு தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரை மரியாதை நிமித்தமாக சுகாதாரத்துறை அமைச்சர் சந்தித்தது மகிழ்ச்சிதான். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவருடன் புகைப்படம் எடுக்க என் தாய் மறுத்தும், அதை எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் பதிவு செய்துள்ளார். இந்தச் செயலால் என் தாய் மிகவும் வேதனையடைந்துள்ளார். என் அப்பா, அம்மா இருவரும் வயதானவர்கள். ஏற்கெனவே தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், வெளியே இருந்து வருபவர்களை முடிந்த அளவு தவிர்த்து வருகிறோம். இந்தச் சூழலில் புகைப்படம் எடுத்து அதை வெளியிடுவது எங்கள் மனநிலையை மிகவும் மோசமாக்குகிறது" என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்
`காய்ச்சலால் அனுமதி; உடல்நிலை சீராக இருக்கிறது' -எய்ம்ஸ் மருத்துவர்கள் கண்காணிப்பில் மன்மோகன் சிங்

இதுகுறித்து `தி பிரின்ட்' இணையதளத்திற்கு பேட்டியளித்திருக்கும் தமன் சிங், ``அனைவரும் வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு செல்ல என் தந்தை பூங்காவில் உள்ள விலங்கல்ல" என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கடும் விமர்சனங்களுக்குப் பிறகு இந்தப் புகைப்படங்கள் அமைச்சரின் ட்விட்டர் அக்கவுன்ட்டிலிருந்து நேற்று நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு