Published:Updated:

`பா.ஜ.க, காங்கிரஸுக்கு ஒரே வழிதான்!’ - பிறந்தநாளில் கட்சிகளை விமர்சித்த மாயாவதி

மாயாவதி
மாயாவதி ( ANI )

``பா.ஜ.க-வில் குற்றவாளிகள் உள்ளனர். ஆனால், அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை” என்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பேசியுள்ளார்.

உத்தரப்பிரதேசம், லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தனது 64வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சோனியா காந்தி - மாயாவதி - மம்தா பானர்ஜி
சோனியா காந்தி - மாயாவதி - மம்தா பானர்ஜி

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ``பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசும் காங்கிரஸ் கட்சியின் பாதையையே பின்பற்றி வருகிறது. காங்கிரஸ் ஆட்சியைப் போலவே பா.ஜ.க-வும் மக்கள் நலனையும் தேசிய நலனையும் ஒதுக்கி வைத்துள்ளது. தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை அரசியல் ஆதாயங்களுக்காக தவறாகப் பயன்படுத்துகின்றனர். அரசாங்கத்தின் தவறான கொள்கைள் நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை சீர்குலைய வழிவகுத்துள்ளன.

`CAA-வை ஆதரித்த பெண் எம்.எல்.ஏ; வாய்ஸ் கொடுத்த பா.ஜ.க!'- அதிரடி காட்டிய மாயாவதி

வறுமை, வேலை வாய்ப்பின்மை, வன்முறைகள் ஆகியவை காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததைவிட தற்போது அதிகமாகிவிட்டன. நாட்டினுடைய பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க-வில் குற்றவாளிகள் உள்ளனர். ஆனால், அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. நான் ஆட்சியிலிருந்தபோது எனது கட்சியிலுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ``குடியுரிமை திருத்தச் சட்டம் சமூகத்தில் ஒரு பிரிவினை அந்நியப்படுத்துகிறது என்பதை எங்களுடைய கட்சி நம்புகிறது. நாங்கள் அதை எதிர்க்கவில்லை என்று கூறுவது பொய். சில கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர் பொய்களை பரப்பும் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பகுஜன் சமாஜ்தான் முதன்முதலில் இந்த சட்டத்தை எதிர்த்தது. நாங்கள் அமைதியான முறையில் எதிர்த்தோம். நாங்கள் உரிய அனுமதி பெற்று அமைதியான போராட்டங்களை மட்டுமே நடத்துவோம்” என்று பேசினார்.

மாயாவதி
மாயாவதி

மேலும், ``ஜோதிராவ் பூலே, சத்ரபதி ஷாஹூஜி, நாராயண குரு, பாபா சாஹேப் அம்பேத்கர் மற்றும் காஷிராம் ஆகியோரின் வழிகளைப் பின்பற்றி என்னுடைய பிறந்தநாளையும் `மக்கள் நலத்துக்கான தினமாக’ கட்சியின் உறுப்பினர்கள் கொண்டாடுவார்கள்” என்றும் அறிவித்துள்ளார். தனது கடந்த ஒரு வருட அரசியல் பயணம் மற்றும் போராட்டம் குறித்த புத்தகம் ஒன்றையும் இன்று அவர் வெளியிட்டுள்ளார்.

`நம்பகமற்ற, மோசடிக்கட்சி காங்கிரஸ்!’ - எம்.எல்.ஏ-க்கள் கட்சித் தாவலால் கொதித்த மாயாவதி
அடுத்த கட்டுரைக்கு