Published:Updated:

ரீசெட் & ரீசார்ஜ்: ஊழியர்களுக்கு 11 நாள் விடுப்பு அறிவித்த மீஷோ நிறுவனம் - காரணம் என்ன?

மீஷோ ஊழியர்கள்

மீஷோவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 11 நாள் விடுமுறை அளிக்கத் திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம். இதற்கான காரணம் என்ன தெரியுமா?

ரீசெட் & ரீசார்ஜ்: ஊழியர்களுக்கு 11 நாள் விடுப்பு அறிவித்த மீஷோ நிறுவனம் - காரணம் என்ன?

மீஷோவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 11 நாள் விடுமுறை அளிக்கத் திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம். இதற்கான காரணம் என்ன தெரியுமா?

Published:Updated:
மீஷோ ஊழியர்கள்

2015 டிசம்பரில் மீஷோ என்ற ஆன்லைன் ஷாப்பிங் கம்பெனியை டெல்லி ஐஐடி மாணவர்கள் இருவர் தொடங்கினர். அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற பிரபல ஷாப்பிங் நிறுவனங்கள் மத்தியில், சந்தையில் நுழைந்த சிறிது காலத்திலேயே வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது மீஷோ நிறுவனம்.

இதனிடையே, மீஷோவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 11 நாள் விடுமுறை அளிக்கத் திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம். பண்டிகை காலத்தின்போது விற்பனை என்பது வழக்கத்திற்கு மாறாகச் சற்று அதிகமாகவே இருக்கும். இதனைக் கருத்தில் கொண்டு மீஷோ நிறுவனம் பண்டிகைக்கால விற்பனைக்குப் பிறகுத் தனது ஊழியர்களுக்குக் கட்டாயம் ஓய்வு தேவை என்றும், அவர்களின் மனநலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் இந்த 11 நாள் விடுப்பை அளிக்க உள்ளது.

அக்டோபர் 22ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை அனைத்து ஊழியர்களுக்கும் இந்த விடுப்பு வழங்கப்படவுள்ளது. இந்த விடுப்பிற்கு ரீசெட் & ரீசார்ஜ் (Reset and Recharge) எனப் பெயர் வைத்துள்ளனர்.

இது குறித்து தலைமை தொழில்நுட்ப அதிகாரியான சஞ்சீவ் பர்ன்வல் ட்வீட்டும் செய்துள்ளார். இதுமட்டுமின்றி மீஷோ நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் ஊழியர்களுக்குப் பெற்றோரைக் கவனித்துக்கொள்ள 30 நாள் விடுப்பு, ஆரோக்கியத்தை மேம்படுத்த 30 நாள் விடுப்பு என ஊழியர்களின் தேவைக்கு ஏற்றார் போல் விடுமுறைகளை ஏற்கெனவே அறிவித்துள்ளனர்.