Published:Updated:

`சீனாவில் 3 ஆண்டுகள்;பீஜிங் இந்தியர்களின் செல்லமகள்!'-மோடியின் நிழலாகப் பின்தொடர்ந்த பிரியங்கா யார்?

நிலாக்‌ஷி, இந்தி, ஆங்கிலம், பெங்காலி, ஃப்ரெஞ்ச் மொழிகளை நன்கு கற்றறிந்தவர். ஆனால், அவர் இந்த சந்திப்பில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாகத்தான் பிரியங்கா இடம்பெற்றிருந்தார்.

பிரியங்கா சோஹானி
பிரியங்கா சோஹானி

வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் வரலாற்றுச் சந்திப்பாக பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் சந்தித்துக்கொண்டனர். கலைநிகழ்ச்சிகள், விருந்து எனப் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் நடந்த இந்த சந்திப்பில், ``இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், முதலீடு மற்றும் சேவைகள் போன்றவை குறித்து விவாதிக்க, ஒரு புதிய உயர்மட்டக் குழு உருவாக்குவது, சீனா - தமிழக உறவு, தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத அமைப்புகளை எதிர்கொள்வது" உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை நடத்தினர்.

மசூதன் ரவீந்திரன்
மசூதன் ரவீந்திரன்

மாமல்லபுர சிற்பங்கள் குறித்தும் ஜின்பிங்-குக்கு விவரித்த இந்த மதுசூதன் ரவீந்திரன், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பை முடித்தவர். 2007-ம் ‌ஆண்டு குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சிபெற்று, இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்தார். 2009-11 காலகட்டத்தில், சீனாவின் மூன்றாவது வெளியுறவுத்துறை செயலாளராகப் பணியாற்றினார். பின்னர், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் 2 ஆண்டுகள் பணியாற்றினார்.

பிரியங்கா சோஹானி
பிரியங்கா சோஹானி

இதையடுத்து, 2013-ம் ஆண்டு மீண்டும் சீனாவில் பணியமர்த்தப்பட்டார். நீண்ட நாள்கள் சீனாவில் பணியாற்றியதால், அந்நாட்டின் அதிகாரபூர்வ மொழியான மாண்டரின் மொழியை நன்கு கற்றுக்கொண்டார். 2014-ம் ஆண்டு ஜி ஜின்பிங் இந்தியா வந்தபோது, மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டார்.

`கோல்டு மெடல்.. ஜூனியர் கேடர்!'- இம்ரானை கிளீன் போல்டாக்கிய இன்டர்நெட் சென்சேஷன் விதிஷா மைத்ரா யார்?

இவர் ஒருபுறம் என்றால், இரண்டாம் நாள் சந்திப்பில், மதுசூதனுக்குப் பதில் மோடிக்கு நிழல்போல இருந்தவர், இளம் ஐஎஃப்எஸ் அதிகாரி பிரியங்கா சோஹானி. மோடி எப்போதும் இந்தி மொழி பேசுவதை வழக்கமாகக் கொண்டவர். பிற நாட்டுத் தலைவர்கள் சந்திப்பின்போதும் இந்த வழக்கம் தொடர்கிறது. இந்த மாதிரியான தருணங்களில் மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் பிற தலைவர்களிடம் பேசிவருகிறார்.

பிரியங்கா சோஹானி
பிரியங்கா சோஹானி

பொதுவாக, பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களின்போது, வெளியுறவு அமைச்சக இயக்குநரான நிலாக்‌ஷி சஜா சின்ஹாதான் இருப்பார். நிலாக்‌ஷி, இந்தி, ஆங்கிலம், பெங்காலி, ஃப்ரெஞ்ச் மொழிகளை நன்கு கற்றறிந்தவர். ஆனால், அவர் இந்த சந்திப்பில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாகத்தான் பிரியங்கா இடம்பெற்றிருந்தார்.

நரேந்திர மோடி - ஜி ஜின்பிங்... வந்தது முதல் சென்றது வரை!

மோடிக்கும் ஜின்பிங்-க்கும் இருந்த மொழித் தடையை உடைத்து, சிறந்த மொழிபெயர்ப்பை வழங்கினார் இந்த பிரியங்கா சோஹானி. இரு தலைவர்கள் சந்திப்பு குறித்த வீடியோ வெளியானபோது, பிரியங்கா வைரலானார். காரணம், இரு தலைவர்கள் பேசுவதையும் உன்னிப்பாகக் கவனிப்பதும், அவர்களுக்கு உரிய மொழிபெயர்ப்பை அளித்ததன் மூலமும் பிரியங்கா ஈர்க்கப்பட்டார்.

பிரியங்கா சோஹானி
பிரியங்கா சோஹானி

யார் இந்த பிரியங்கா சோஹானி?

பிரியங்கா சோஹானி, மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். மகாராஷ்டிராவிலிருந்து 2012-ம் ‌ஆண்டு குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சிபெற்று, இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்தார். மகாராஷ்டிரா அளவில் மூன்றாம் இடமும், இந்திய அளவில் யுபிஎஸ்சி தேர்வில் 26-வது இடமும் பெற்ற பிரியங்கா, 2016 முதல் சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றிவருகிறார்.

`இதையெல்லாம் மோடிகிட்ட சொல்லிடாதீங்க ஜின்பிங்!' #XiJinping

3 வருடங்கள்தான் சீனாவில் பணியாற்றினாலும், மாண்டரின் மொழியை சீக்கிரமாகவே கற்றுக்கொண்டவர் என்பதால், சீன அதிபரின் இந்த தமிழகப் பயணத்துக்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்தி, மராட்டி, ஆங்கிலம், சீன மொழிகளில் வல்லவரான ப்ரியங்கா, சீன அதிபர் சென்னை வந்தபோது அவரை வரவேற்பதில் இருந்தே மொழிப்பெயர்ப்பாளராக இருந்தார்.

பிரியங்கா சோஹானி
பிரியங்கா சோஹானி

பீஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில் முதன்மைச் செயலராக (அரசியல் பிரிவில்) பணியாற்றும் பிரியங்கா, வெளிவிவகாரத் துறையில் சிறந்த பயிற்சிக்கான தங்கப்பதக்கம் மற்றும் பிமல் சன்யால் விருது வென்றுள்ளார். முதன்மைச் செயலாளராக இருக்கும்போது, சீனாவில் உள்ள இந்தியர்களுடன் நெருங்கிப் பழகுவது, அவர்களுக்குத் தேவையான உதவிகளை உடனடியாகச் செய்வது என பீஜிங் தூதரக வட்டாரத்தில் பேசப்படும் அதிகாரியாக வலம்வருகிறார்.

ஜின்பிங் தங்குவதற்கு ஐ.டி.சி ஹோட்டலைத் தேர்ந்தெடுத்தது ஏன்?