Published:Updated:

அமர் ஜவான் ஜோதி 50 ஆண்டுகளுக்குப்பின் தேசிய போர் நினைவுச் சின்ன சுடருடன் இணைப்பு! - ராகுல் வருத்தம்

அமர் ஜவான் ஜோதி

1972 முதல் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று ஜனாதிபதி, பிரதமர், படைத் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அமர் ஜவான் ஜோதிக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அமர் ஜவான் ஜோதி 50 ஆண்டுகளுக்குப்பின் தேசிய போர் நினைவுச் சின்ன சுடருடன் இணைப்பு! - ராகுல் வருத்தம்

1972 முதல் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று ஜனாதிபதி, பிரதமர், படைத் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அமர் ஜவான் ஜோதிக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Published:Updated:
அமர் ஜவான் ஜோதி

அமர் ஜவான் ஜோதி 50 ஆண்டுகளுக்குப் பின் இன்று தேசிய போர் நினைவுச்சின்ன சுடருடன் இணைக்கப்படுகிறது. 1971-ம் ஆண்டு நடந்த இந்திய - பாகிஸ்தான் போரில் இறந்த இந்திய வீரர்களின் நினைவாக அமர் ஜவான் ஜோதி கட்டப்பட்டது. அமர் ஜவான் 1972 ஜனவரி 26-ல் இந்திரா காந்தி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இது புது டில்லியில் ராஜ்பந்த் இடத்தில் இந்தியா கேட் பகுதியில் அமைந்துள்ளது. ஒரு பீடம் போன்ற அமைப்பின் நடுவில் துப்பாக்கியும் அதன் மேல் வீரர்களின் தலைக்கவசம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை சுற்றி நான்கு புறமும் தீபம் ஏற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று மட்டும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கும். ஜோதியை பராமரிக்க ஒரு நபரும் பணியமர்த்தப்பட்டுள்ளார். 1971 முதல் 2006 வரை, திரவ பெட்ரோலிய வாயு எரிபொருள் மூலமாகவும் 2006 முதல் இயற்கை எரிவாயு மூலமாகவும் இச்சுடர் எரிந்து வருகிறது. 1972 முதல் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று ஜனாதிபதி, பிரதமர், படைத் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அமர் ஜவான் ஜோதிக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அமர் ஜவான் ஜோதி
அமர் ஜவான் ஜோதி

இந்நிலையில் அமர் ஜவான் ஜோதி, தேசிய போர் நினைவு சுடருடன் இணைக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. தேசிய போர் நினைவு சடர் இந்தியா கேட்டிலிருந்து 400 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தேசிய போர் நினைவுச் சின்னமானது 176 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இது 2019 பிப்ரவரி 25 -ல் பிரதமர் நரேந்திரமோடி அவர்களால் திறக்கப்பட்டது. தேசிய போர் நினைவு சுடரில் , மையத்தில் சுடரும் அதனை சுற்றி நான்கு வளையங்களும் அமைக்கப்பட்டிருக்கும். அமர் சக்கரா, வீர சக்கரா, தியாக சக்கரா மற்றும் ரக்சக் சக்கரா என்று வளையங்களுக்குப் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராகுல் காந்தியின் ட்வீட்
ராகுல் காந்தியின் ட்வீட்

மேலும் 25,942 வீரர்களின் பெயர்கள் தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும். அமர் ஜவான் ஜோதி, தேசிய போர் நினைவு சுடருடன் இணைக்கப்படுவது குறித்து பலரும் தங்களது ட்விட்டர் பகுதியில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். வீரர்களின் நினைவாக எரியும் சுடர் இன்று அணைக்கப்படுவது வருத்தமளிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் ஹிந்தியில் பதிவிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism