Published:Updated:

`புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தற்காலிக வேலைவாய்ப்பு!’ -பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் நடவடிக்கை

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ( vikatan )

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் ஏற்கெனவே பயனடைந்துவரும் 32 லட்சம் தொழிலாளர்களோடு, கூடுதலாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு தருவதற்கு பீகார் அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

இந்தியா முழுவதும் பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் , சத்தீஸ்கர் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், கட்டட வேலைகளில், தொழிற்சாலை வேலைகளில் ஈடுபட்டுவந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக, அவர்களில் பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர். வழக்கமாக இப்படி சொந்த ஊர்களுக்குச் செல்பவர்கள், சில நாள்களுக்குப்பின் மீண்டும் வேலைக்குத் திரும்புவார்கள். ஆனால், தற்போதுள்ள சூழலில் மீண்டும் வேலைக்குச் சென்றால் வேலை தரப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு
vikatan

தொழில் நிறுவனங்கள் பலவும் பெரிய அளவிலான வருமான இழப்பில் சிக்கித்தவிக்கின்றன. திரும்பவும் தொழிற்கூடங்கள் திறக்கப்பட்டாலும், அதே அளவு எண்ணிக்கையில் தொழிலாளர்களைக்கொண்டு இயங்குமா என்பதும் உறுதியில்லை. சமூக இடைவெளி, சானிடைஸர் பயன்பாடு, கொரோனா பரவுமோ என்ற பயம் காரணமாக, உடனடியாக அவர்களைப் பணியில் சேர்த்துக்கொள்ள தயக்கம் காட்டக்கூடும். எனவே, அந்தத் தொழிலாளர்களுக்கு இன்னும் சில காலத்துக்கு அந்தந்த மாநில அரசுகளே வேலைக்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பீகார் அரசு, பிரதம மந்திரி மலிவு விலை வீடுகள் திட்டத்தின்கீழ் 1.4 மில்லியன் வீடுகளைக் கட்டும் திட்டத்தில், தற்போது தங்கள் மாநிலத் தொழிலாளர்களை ஈடுபடுத்தவுள்ளது.

பீகார், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள், தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. பீகார் அரசு, பிரதம மந்திரி மலிவு விலை வீடுகள் திட்டத்தின்கீழ் 1.4 மில்லியன் வீடுகளைக் கட்டும் திட்டத்தில் தற்போது தங்கள் மாநிலத் தொழிலாளர்களை ஈடுபடுத்தவுள்ளது. மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் ஏற்கெனவே பயனடைந்துவரும் 32 லட்சம் தொழிலாளர்களோடு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு தருவதற்கு நடவடிக்கை எடுத்துவருகிறது. அதேபோல, விவசாயப் பணிகளிலும் இவர்களை ஈடுபடுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின்கீழ், மொத்தம் 2,00,000 ஏக்கர் நிலங்களில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்படவுள்ளது. இதன்மூலம், 5 லட்சம் தொழிலாளர்களின் குடும்பத்தினர் பயனடைவார்கள்.

பீகாரைப்போலவே மத்தியப் பிரதேச அரசும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் புலம்பெயர்ந்த தங்கள் மாநிலத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பளிக்க முடிவெடுத்துள்ளது. இதுவரை இந்தத் திட்டத்தின்கீழ் 11 லட்சத்து 25 ஆயிரம் தொழிலாளர்களுக்குமேல் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள். இனி இவர்களோடு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கப்படும். நகர்ப் பகுதிகளில் ஜீவன் சக்தி திட்டத்தின்கீழ், முகக்கவசம் தயாரிக்கும் தொழிலில் பெண்கள் ஈடுபடவுள்ளார்கள். ஏற்கெனவே, 10,000 பெண்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். இனி, இது மேலும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக, மூன்று புதிய திட்டங்களை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை திட்டவட்டமாகத் தெரியாவிட்டாலும், நடப்பு நிதியாண்டுக்கு, 10 கோடி மனித உழைப்பு நாள்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ், மொத்தம் 2,00,000 ஏக்கர் நிலங்களில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்படவுள்ளது. இதன்மூலம் 5 லட்சம் தொழிலாளர்களின் குடும்பத்தினர் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
vikatan

இதேபோல சத்தீஸ்கர் மாநில அரசும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பளிக்க முடிவெடுத்துள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் 57,536 தொழிலாளர்கள்வரை இதில் பதிவுசெய்துள்ளனர். இந்த எண்ணிக்கை, ஏப்ரல் இறுதியில் 19,85,166 ஆக உயர்ந்துள்ளது. ஆக, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தற்காலிகமாக வழங்கப்படவுள்ள இந்த வேலைவாய்ப்புகள், அவர்களுக்கு நிரந்தர வருமானம் அளிப்பதாக மாறினால், அவர்களின் வாழ்க்கை அவலம் மாற்றப்படலாம். அதற்கு, இந்த கொரோனா சூழல் ஒரு தொடக்கப்புள்ளியாக அமையட்டும்.

அடுத்த கட்டுரைக்கு