Published:Updated:

45,000 அடி உயரம்; மணிக்கு 482 கி.மீ வேகம்! - MQ-9A Reaper ட்ரோன்களை வாங்குகிறதா இந்தியா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
MQ-9A Reaper ட்ரோன்
MQ-9A Reaper ட்ரோன் ( General Atomics MQ-9 Reaper / wikipedia )

அமெரிக்கா, Reaper ட்ரோனை, இரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானியைக் கொல்லப் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்திய விமானப்படையில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள், இந்தியப் பாதுகாப்புத்துறையின் பலத்தை வெகுவாக அதிகரித்திருக்கின்றன. தொடர்ந்து எல்லையில் நிலவும் பதற்றமான சூழலில், இந்தியப் பாதுகாப்புத்துறைக்கு மேலும் வலுசேர்க்கும்விதமாக, ஏவுகணைகளை வானிலிருந்தே செலுத்தும் அதிநவீன ட்ரோன்களை வாங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஃபேல் விமானம்
ரஃபேல் விமானம்
twitter

மத்திய பாதுகாப்புத்துறை, இந்திய-சீன எல்லையில் தொடர்ந்து நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில்கொண்டு, சில முக்கிய முடிவுகளை எடுத்துவருகிறது. கடந்த சில நாள்களாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி, அமெரிக்காவின் ஜெனரல் அடாமிக்ஸின் (General Atomics) 30 அதிநவீன MQ-9A Reaper ட்ரோன்களை வாங்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்து நடந்துவந்த நிலையில், கடந்த சில மாதங்களாகத் தொடரும் பதற்றமான சூழலை கருத்தில்கொண்டு, இந்த 30 ட்ரோன்களில் அடுத்த சில மாதங்களில் ஆறு ட்ரோன்களை முதற்கட்டமாக வாங்க முடிவு செய்திருப்பதாக இந்தியா டுடே ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதாவது ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு தலா இரண்டு ட்ரோன்கள் முதற்கட்டமாக வழங்கப்படும் என்றும் அடுத்த மூன்று வருடங்களில் மீதமிருக்கும் 24 ட்ரோன்களும் பெறப்பட்டு, முப்படைகளுக்கும் தலா எட்டு ட்ரோன்கள் பிரித்து வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

India-China standoff: `சந்தேகம் வேண்டாம்... நமது எல்லைகளைப் பாதுகாப்பது உறுதி!’ - ராஜ்நாத் சிங்

இந்த ட்ரோன்களின் அவசியம் குறித்து அடுத்து நடக்கும் பாதுகாப்புத்துறையின் கையகப்படுத்துதல் கவுன்சில் கூட்டத்தில் எடுத்துரைக்கப்படும் என்றும், அதன் பின்னர் ஒப்பந்தம் போடப்பட்டு, ட்ரோன்கள் பெறப்படும் என்றும் கூறப்படுகிறது. 30 MQ-9A Reaper ட்ரோன்களின் மதிப்பு என்பது 3 பில்லியன் அமெரிக்க டாலர். அதாவது இந்திய மதிப்பில் 22,000 கோடி ரூபாய். பொதுவாக, இந்த நடவடிக்கைகள் ஒப்பந்தமாக மாற, நிறைய கால அவகாசம் தேவைப்படும். ஆனால், தற்போதைய அவசியத்தை கருத்தில்கொண்டு, குறுகிய காலகட்டத்தில் ஒப்பந்தம் போடப்படும் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. இரு நாட்டு அரசாங்கங்களும் நேரடிப் பேச்சுவார்த்தை மூலம் விரைவில் ட்ரோன்களை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

லடாக் எல்லை
லடாக் எல்லை
AP

MQ-9A Reaper ட்ரோன்களின் வரவு, இந்திய பாதுகாப்புத்துறையை மேலும் வலுப்படுத்தும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இன்ஃப்ரா ரெட் ரேடார் கருவிகளையும், மல்ட்டி மோடு கடல் கண்காணிப்பு ரேடார்களையும் எடுத்துச் செல்லும் இந்த ஆளில்லா விமானம், பல்வேறு ஏவுகணைகளையும் தன்னுள் வைத்துக் கொண்டு செல்லும் திறன் படைத்தது. வானிலிருந்தே இலக்கின் மீது துல்லியமாக ஏவுகணைகளை ஏவும் திறன்கொண்ட இந்த ட்ரோன்கள், அமெரிக்காவின் பல முக்கிய ஆபரேஷன்களைச் செய்திருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செயற்கைக்கோள் உதவியுடன் இயக்கப்படும் இந்த ட்ரோன், இலக்கை 45,000 அடி உயரத்திலிருந்து தாக்கும் திறன்கொண்டது. தொடர்ந்து பணியில் 35 மணி நேரம் இருக்கும். இந்த ட்ரோனால், ரேடார் கருவி மூலம் எதிரிகளின் முகாம்களையும் அசைவுகளையும் கண்காணிக்க முடியும். அதிகபட்சமாக மணிக்கு 482 கிலோ கிலோமீட்டர் வேகத்தில் இதை இயக்க முடியும். மேலும், இந்த ட்ரோனால் எங்கிருந்து வேண்டுமானாலும் செயல்பட முடியும். `இந்தியா இந்த ட்ரோன்களை வாங்க முடிவு செய்தால், கிழக்கு லடாக் பகுதியில் நமது கண்காணிப்பை இன்னும் துல்லியமாக்க முடியும்’ என்கிறார்கள் வல்லுநர்கள்.

MQ-9A Reaper ட்ரோன்
MQ-9A Reaper ட்ரோன்
General Atomics MQ-9 Reaper / wikipedia

அமெரிக்கா, இரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானியை கொல்வதற்கு Reaper ட்ரோனைப் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. நள்ளிரவில் ஆளில்லா Reaper ட்ரோன் மூலம் இரண்டு Hellfire ஏவுகணைகளைப் பயன்படுத்தி, காசிம் சுலைமானி பயணித்த காரை அமெரிக்கா துல்லியமாகத் தாக்கியது என்ற தகவல் அப்போதே வெளியானது. முன்னதாக 2015-ம் ஆண்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த முகமது எம்வாஸி என்பவர் பயணித்த வாகனத்தை இந்த ட்ரோன் மூலம் தாக்கியது அமெரிக்கா. ஏற்கெனவே இந்தியா அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை வாங்கியபோது Hellfire ஏவுகணைகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா, தற்போது இந்தியாவுக்கு அதிக ராணுவ உபகரணங்களை வழங்கும் நாடாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு