Published:Updated:

தாய் கண்முன்னே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மகள்! - ஜார்கண்டில் அதிர்ச்சி சம்பவம்

பாலியல் வன்கொடுமை ( சித்திரிப்புப் படம் )

ஜார்கண்டில் தாய் கண்முன்னே சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தாய் கண்முன்னே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மகள்! - ஜார்கண்டில் அதிர்ச்சி சம்பவம்

ஜார்கண்டில் தாய் கண்முன்னே சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
பாலியல் வன்கொடுமை ( சித்திரிப்புப் படம் )

ஜார்கண்டில் தாயின் கண்முன்னே மகள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜார்கண்ட் மாநிலம், தும்கா மாவட்டத்திலுள்ள தியோகரில் ஞாயிற்றுக்கிழமை விழா ஒன்றில் கலந்துகொண்ட சிறுமியும் அவருடைய தாயும், விழா முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இரண்டு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக அவர் தாய் கண்முன்னே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் திங்கள்கிழமை போலீஸில் புகார் அளித்திருக்கிறார். சிறுமியின் தாயார், ``இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர் என்னையும், என் மகளையும் வழிமறித்தனர். அதன் பின்னர் என்னுடைய மகளை வலுக்கட்டாயமாக ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

கைது
கைது

அப்போது நான் அவர்களை தடுக்க முயற்சி செய்தேன். ஆனால் அவர்கள் என்னை தாக்கிவிட்டு, என்னுடைய கண்முன்னே மகளை பாலியல் வன்கொடுமை செய்தனர்'' எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய போலீஸ் அதிகாரிகள், ``சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். பரிசோதனை முடிவுகள் வந்ததும் குற்றவாளிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகளில் இருவரை அடையாளம் கண்டு கைதுசெய்திருக்கிறோம். மேலும் மூன்று நபர்களைத் தேடி வருகிறோம்'' என்றனர்.