Published:Updated:

கூட்டுப் பாலியல் வன்கொடுமை; ஆடைகளை களைந்து வீதியில் விடப்பட்டாரா 15 வயது சிறுமி? - என்ன நடந்தது?

கூட்டுப் பாலியல் வன்கொடுமை ( சித்திரிப்புப் படம் )

15 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, ஆடைகளின்றி தன் வீட்டுக்கு நடந்து செல்ல வற்புறுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், மொராதாபாத் மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, ஆடைகளின்றி தன் வீட்டுக்கு நடந்து செல்ல வற்புறுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சம்பவம் கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதி நடந்திருக்கிறது. சிறுமி தனது பக்கத்து ஊரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு வீட்டுக்குத் திரும்புகையில் சிலரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். பின்னர் ஆடைகளின்றி வீட்டுக்கு நடந்து செல்ல வற்புறுத்தப்பட்டிருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை (Representational Image) )
பாலியல் வன்கொடுமை (Representational Image) )

சிறுமி ஆடையின்றி சாலையில் தன் வீட்டை நோக்கி நடந்து செல்வதைச் சிலர் வீடியோவாக எடுத்து சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் பதிவேற்றியிருக்கின்றனர். இந்த காணொளி பரவலானதை அடுத்து, இந்தச் சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

இந்த நிலையில், சிறுமியின் உறவினர் ஒருவர் போஜ்பூர் காவல் நிலையத்தில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி பக்கத்து ஊரைச் சார்ந்த நான்கு இளைஞர்கள் மீது புகார் கொடுத்திருக்கிறார்.

போலீஸ்
போலீஸ்

இது குறித்து மொராதாபாத் காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், ``புகார் குறித்து சிறுமியின் பெற்றோரிடம் விசாரிக்கையில், அவர்கள் இந்தச் சம்பவத்தை மறுத்துவிட்டனர். எனினும் விசாரணை நடந்து வருகிறது. அதோடு குற்றத்தில் ஈடுபட்ட நான்கு பேரில் ஒருவரைக் கைதுசெய்திருக்கிறோம். மற்ற மூவரைத் தீவிரமாகத் தேடி வருகிறோம். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.