Published:Updated:

உ.பி: பாலியல் வன்கொடுமைப் புகார்... பாஜக எம்.எல்.ஏ., அவரின் மகன்மீது வழக்கு பதிவு!

பா.ஜ.க எம்.எல்.ஏ சோட்டே லால் வர்மா

பெண்ணைத் துன்புறுத்தியதாக உத்தரப்பிரதேச பா.ஜ.க எம்.எல்.ஏ மீதும், அவரின் மகன் மீதும் எஃப். ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

உ.பி: பாலியல் வன்கொடுமைப் புகார்... பாஜக எம்.எல்.ஏ., அவரின் மகன்மீது வழக்கு பதிவு!

பெண்ணைத் துன்புறுத்தியதாக உத்தரப்பிரதேச பா.ஜ.க எம்.எல்.ஏ மீதும், அவரின் மகன் மீதும் எஃப். ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

Published:Updated:
பா.ஜ.க எம்.எல்.ஏ சோட்டே லால் வர்மா

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் சோட்டே லால் வர்மா. இவர் பா.ஜ.க எம்.எல்.ஏ. இவரின் மகன் லஷ்மி காந்த் வர்மா. சோட்டே லால் வர்மாவின் மகளின் தோழியான பாதிக்கப்பட்ட பெண் ஆக்ராவிலுள்ள அவரின் வீட்டுக்கு அடிக்கடிச் சென்றுவந்திருக்கிறார். இந்த நிலையில், 2003-ம் ஆண்டு அந்தப் பெண்ணுடன் லஷ்மி காந்த்துக்குத் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, லஷ்மி காந்த் தனியாக இருந்தபோது, அந்தப் பெண்ணைத் ​​தனது வீட்டுக்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
சித்திரிப்புப் படம்

மேலும், அந்தப் பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த ஜூஸைக் கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது. அந்தப் பெண்ணுக்கு சுயநினைவு வந்ததும், இதைப் பற்றி யாரிடமாவது சொன்னால், அந்தப் பெண்ணின் சகோதரனைக் கொன்றுவிடுவதாக லஷ்மி காந்த் மிரட்டியிருக்கிறார். மேலும், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாகவும் உறுதியளித்திருக்கிறார். அந்தப் பெண்ணை லஷ்மி காந்த், நிர்வாணமாகப் புகைப்படமும் எடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பாதிக்கப்பட்ட பெண் பயந்து, யாரிடமும் சொல்லவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு, லஷ்மி காந்த் அந்தப் பெண்ணை ஒரு கோயிலில் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

காவல்துறை
காவல்துறை

இந்த நிலையில், 2006-ம் ஆண்டு, அந்தப் பெண் ஜலந்தருக்குச் சென்றபோது, ​​சோட்டே லால் தன் மகனுக்கு அவசர அவசரமாக வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துவைத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, மீண்டும் ஆக்ரா திரும்பிய பெண்ணை மிரட்டி, அவர் தங்குவதற்கு ஒரு வீடு கொடுக்கப்பட்டிருக்கிறது. அடிக்கடி லஷ்மி காந்த் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனால் அந்தப் பெண்ணுக்கு 2011-ல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இருப்பினும், லஷ்மி காந்த்தும் சோட்டே லாலும் ஓர் ஆண் குழந்தை வேண்டுமென்று விரும்பினர். அதனால் அதற்குப் பிறகு மூன்று முறை லஷ்மி காந்த், கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியிருக்கிறார் எனவும் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பா.ஜ.க எம்.எல்.ஏ சோட்டே லால் வர்மா
பா.ஜ.க எம்.எல்.ஏ சோட்டே லால் வர்மா
ட்விட்டர்

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்திருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை தரப்பு, "பா.ஜ.க எம்.எல்.ஏ சோட்டே லால் வர்மா பெண்ணைத் துன்புறுத்திய குற்றத்துக்காகவும், அவரின் மகன் லஷ்மி காந்த் வர்மா மீது பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காகவும் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. எம்.எல்.ஏ மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு எதுவும் இல்லை" என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த வழக்கில் இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை. ஆக்ராவில் உள்ள ஃபதேஹாபாத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சோட்டே லால் வர்மாவின் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.