Published:Updated:

‘நான் கையில் வைத்திருந்த கருவி இதுதான்’ - ட்விட்டரில் விளக்கிய மோடி

மகாபலிபுரத்தில் எடுத்த மோடியின் புகைப்படத்தில், அவர் கையில் வைத்திருந்த கருவி பற்றி பிரதமரே விளக்கம் அளித்துள்ளார்.

மோடி
மோடி

இந்தியப் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய இருவரும் கடந்த இரு நாள்களாக சென்னையில் நடந்த பல்வேறு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினர். சுமார் 63 ஆண்டுகளுக்குப் பிறகு, சீன அதிபர் ஒருவர் தமிழகம் வந்திருந்தது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது.

மோடி - ஜி ஜின்பிங்
மோடி - ஜி ஜின்பிங்

சீன அதிபரும் இந்தியப் பிரதமரும், முதல் நாள் மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசினர். அந்த சந்திப்பின்போது, யாரும் எதிர்பார்க்காத விதமாகப் பிரதமர் மோடி, தமிழர்களின் கலாசாரமான வேட்டி சட்டை அணிந்துவந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். இது, தமிழர்கள் உட்பட இந்திய மக்களின் வரவேற்பைப் பெற்றது.

நரேந்திர மோடி - ஜி ஜின்பிங்... வந்தது முதல் சென்றது வரை!

மறுநாள், இரு நாட்டுத் தலைவர்களும் கோவளத்தில் உள்ள தனியார் ஹோட்டலில், காலை 10 மணிக்கு நேரில் சந்தித்துப் பேசினர். இவர்களின் சந்திப்புக்கு முன்னதாக மோடி, கோவளம் கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.

மோடி
மோடி

அப்போது, கடற்கரையிலிருந்த குப்பைகளை அள்ளி தூய்மைப் படுத்தினார். இந்த வீடியோவை அவரே தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, “நாம் இருக்கும் இடத்தை சுத்தமாகவும், உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

`சென்னையில் படிப்பு; முதன்மை செயலாளர் பணி!’ - மோடி, ஜின்பிங் சந்திப்பில் இருந்த தமிழர் மதுசூதன்

மோடி வெளியிட்டிருந்த வீடியோவும் அவரின் புகைப்படங்களும் தேசிய அளவில் கவனம் ஈர்த்தது. அவருடன் சேர்ந்து, பிரதமர் கையில் வைத்திருந்த கருவிபற்றியும் அதிகமாகப் பேசப்பட்டது. அது என்ன கருவி? பிரதமர் எதற்காக அதைக் கையில் வைத்துள்ளார்” எனப் பலரும் பிரதமரின் ட்விட்டரில் கேள்வி எழுப்பிவருகின்றனர். தற்போது, அந்தக் கேள்விக்கு மோடியே பதில் அளித்துள்ளார்.

“மகாபலிபுரம் கடற்கரையில் நான் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, என் கையில் வைத்திருந்த கருவி குறித்து பலரும் நேற்று முதல் தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகின்றனர். அது, நான் அடிக்கடி பயன்படுத்தும் அக்குபிரஷர் ரோலர் கருவி. அது, எனக்கு மிகவும் உதவியாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.