Published:Updated:

குரங்கு எடுத்துச் சென்ற கொரோனா பரிசோதனை ரத்த மாதிரிகள்! -அச்சத்தில் உ.பி குடியிருப்பு வாசிகள்

monkey
monkey ( Representational Image )

சுற்றுலாப் பயணிகள் கொடுக்கும் உணவுப் பொருள்களைப் பெற்று வாழும் குரங்குகள், தாங்களாகவே உணவு தேடிக்கொள்ளும் தன்மையை இழந்து விடுகின்றன. அதனால் உணவுக்கு வழியில்லாதபோது குடியிருப்புகளைத் தேடிச் செல்கின்றன. 

கொரோனா ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பது போல வன விலங்குகளின் வாழ்க்கைச் சூழலும் மாறியிருக்கிறது. சுற்றுலாத் தலங்களில் உள்ள குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளுக்குப் பயணிகள் உணவுப் பொருள்களைக் கொடுப்பது வழக்கம்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இத்தகைய செயல்களின் மூலம் அவற்றின் உணவு தேடும் குணம் மறைந்து, பிறரைச் சார்ந்து இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். அதனால் உணவுப் பொருள்களைக் கொடுக்கக் கூடாது என வனத்துறையினரும் வன ஆர்வலர்களும் எச்சரித்தபோதிலும் சுற்றுலாப் பயணிகள் வன உயிரினங்களுக்கு உணவு வழங்குவதை நிறுத்துவதில்லை.

வன விலங்குகள், பறவைகளுக்கு உணவு தருவது சரியா..? ஓர் அலசல்!

மனிதர்கள் கொடுக்கும் உணவுக்குப் பழக்கப்பட்ட வன உயிரினங்களுக்குத் திடீரென உணவு கிடைக்காதபோது அவை ஆக்ரோஷமாகக் குடியிருப்புகளை நோக்கி வரத் தொடங்குவதுடன் மூர்க்கத்தனமாக உணவுகளைப் பறித்துச் செல்கின்றன. அத்தகைய ஒரு சம்பவத்தால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் குழப்பமும் அச்சமும் ஏற்பட்டிருக்கிறது. 

உணவுக்காகக் காத்திருக்கும் குரங்குகள்
உணவுக்காகக் காத்திருக்கும் குரங்குகள்

உ.பி மாநிலத்தின் மீரட் நகரில் அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கான சிறப்புச் சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. உணவுக்காக அங்கு நுழைந்த குரங்குகளால் பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

உணவு தேடி மருத்துவமனைக்குள் நுழைந்த குரங்குகள், அந்த வழியாக ஒருவர் கொரோனா நோயாளிகளின் ரத்தத்தைப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றபோது அதைத் தட்டிப் பறித்து தூக்கிச் சென்று விட்டன. அதனால் மருத்துவமனை வட்டாரத்தினர் மட்டுமல்லாமல் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிப்போரும் கவலை அடைந்திருக்கிறார்கள்.

கொரோனா நோயாளியின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை லேப் டெக்னீஷியனிடமிருந்து குரங்கள் பறித்துச் சென்று விட்டன.
டாக்டர். எஸ்.கே.கர்க்

இது குறித்து மருத்துவக் கல்லூரியின் டாக்டர் எஸ்.கே.கர்க் கூறுகையில், ``கொரோனா நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளுடன் லேப் டெக்னீஷியன் நடந்து வந்துகொண்டிருந்தபோது கூட்டமாக வந்த குரங்குகள் வழிமறித்து அவரிடம் இருந்த ரத்த மாதிரிகளைப் பறித்துச் சென்று விட்டன. அதனால் மீண்டும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டது” என்றார்.

கொரோனா நோயாளிகளின் ரத்தம் இருந்த பாட்டில்களை குரங்குகள் மருத்துவமனை வளாகத்திலேயே கீழே கொட்டி விட்டனவா என்பது தெரியவில்லை. ஒருவேளை அவற்றின் உடலில் பட்டிருந்தால் அவற்றுக்குக் கொரோனா பரவுமா என்பது குறித்து அப்பகுதி மக்களிடம் பரபரப்பாக விவாதம் நடைபெற்று வருகிறது.  

``26 யானைகள், 70 விலங்குகள் வெச்சிருந்தோம்; இப்ப நிலைமை மிகவும் மோசம்!” - சர்க்கஸ் முதலாளி ஆதங்கம்

மருத்துவமனைக்கு அருகிலேயே குடியிருப்புப் பகுதி இருப்பதால், குரங்கள் மூலம் அங்கு கொரோனா பரவல் ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சம் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. உணவு தேடி ஊருக்குள் நுழையும் குரங்குகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் பொதுமக்கள் முன்வைத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு