Published:Updated:

பீகார்: மூன்று வயது மகளை வாயில் களிமண்ணைத் திணித்து உயிருடன் புதைத்த தாய்! - அதிர்ச்சி சம்பவம்

தாய் - மகள் ( சித்திரிப்புப் படம் )

பீகாரில் மூன்று வயது சிறுமி ஒருவரை அவர் தாய் உயிருடன் மண்ணுக்குள் புதைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பீகார்: மூன்று வயது மகளை வாயில் களிமண்ணைத் திணித்து உயிருடன் புதைத்த தாய்! - அதிர்ச்சி சம்பவம்

பீகாரில் மூன்று வயது சிறுமி ஒருவரை அவர் தாய் உயிருடன் மண்ணுக்குள் புதைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
தாய் - மகள் ( சித்திரிப்புப் படம் )

பீகாரின் கோபா காவல் நிலையத்துக்குட்பட்ட மர்ஹா ஆற்றின் கரையில் மயானம் ஒன்று அமைத்திருக்கிறது. இந்த மயானத்துக்கு அருகில் ஓர் அடர்ந்த வனப்பகுதி இருக்கிறது. அங்கு, சில பெண்கள் காலை வேளையில் விறகு சேகரித்துக்கொண்டிருந்தனர். அப்போது ​​மயானத்திலிருந்து திடீரென ஒருவிதமான அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. அதைக் கேட்டு பீதியடைந்த பெண்கள், பேய் என நினைத்து அங்கிருந்து ஓடிவிட்டனர். பின்னர் கிராமத்துக்குச் சென்றவர்கள் ஆண்களிடம் இது குறித்துத் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

சிறுமி
சிறுமி

அந்த மயானத்துக்குக் கும்பலாகச் சென்ற கிராம மக்கள் சத்தம் கேட்ட இடத்தில் ஆய்வு செய்திருக்கின்றனர். அப்போது, யாரோ அங்கே களிமண் கொண்டு உயிருடன் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதையடுத்து, விரைந்து செயல்பட்ட கிராம மக்கள் களிமண்ணைத் தோண்டி பார்த்தனர். அப்போது 3 வயது சிறுமி ஒருவர் வாயில் களிமண் திணிக்கப்பட்ட நிலையில், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்த காவல்துறையினர், முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறிய சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமி தன் பெயரையும், தன் பெற்றோர் பெயரையும் கூறியிருக்கிறாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போலீஸ்
போலீஸ்

இதில் திடுக்கிடும்விதமாக, ``என் அம்மாவும் பாட்டியும் என்னை அந்த மயானத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கே குழி தோண்டி என்னை அதில் தள்ளினார்கள். அதனால் நான் பயந்து அழத் தொடங்கினேன். என் வாயில் களிமண்ணைத் திணித்துவிட்டு என்னை மண் கொண்டு மூடிவிட்டுச் சென்றுவிட்டார்கள்" என்று கூறியிருக்கிறாள்.

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து சிறுமியின் பெற்றோரைத் தேடிவருகின்றனர்.