Published:Updated:

`முதலில் குழந்தைகள், அடுத்து கணவரின் குடும்பம்!' -பஞ்சாப் போலீஸுக்கு அதிர்ச்சிகொடுத்த இளம்பெண்

கொலை
கொலை ( மாதிரி புகைப்படம் )

தஷ்ரத், கடந்த ஜனவரி 26-ம் தேதி வேலைக்குச் சென்றுள்ளார். வீடு திரும்பியபோது, ரூபாவையும் திவ்யன்ஷுவையும் காணவில்லை. இதனால் பதற்றமடைந்தவர், காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம், புரெய்ல் கிராமத்தைச் சேர்ந்தவர், தஷ்ரத். எலெக்ட்ரீஷியனாகப் பணிபுரிந்துவருகிறார். இவர், ரூபா என்பவரைக் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு 2017-ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தையும் 2019-ம் ஆண்டு, ஒரு பெண் குழந்தையும் பிறந்தன. பெண் குழந்தையான கோமல் பிறந்த அதே ஆண்டிலேயே மர்மமான முறையில் இறந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ரூபா தன்னுடைய இரண்டரை வயது மகனான திவ்யன்ஷுவைக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை
கொலை
மாதிரி புகைப்படம்

வழக்கம்போல தஷ்ரத், கடந்த ஜனவரி 26-ம் தேதி வேலைக்குச் சென்றுள்ளார். வீடு திரும்பியபோது, ரூபாவையும் திவ்யன்ஷுவையும் காணவில்லை. இதனால் பதற்றமடைந்த தஷ்ரத், காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய வீட்டில் பொருள் ஒன்றை தேடிக்கொண்டிருக்கும்போது, படுக்கை அறையில் இருந்த பெட்டியில் திவ்யன்ஷின் உடல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடலை தூக்கிக்கொண்டு அருகிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்குச் சென்றபோது, குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

`என்னைக் கொன்றுவிட்டு சந்தோஷமாக வாழு என்றாள்!' - மனைவியைக் கொலை செய்த கணவன்

தஷ்ரத் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 22 வயதான ரூபாவைத் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று ரூபாவை கைதுசெய்தனர். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தன்னுடைய மகளையும் மகனையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தன் மகனைக் கம்பளி உறை ஒன்றைப் பயன்படுத்தி மூச்சுத் திணறவைத்துக் கொலை செய்து வீட்டின் படுக்கை அறையில் உள்ள பெட்டி ஒன்றில் உடலை மறைத்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தஷ்ரத்தின் முழுக் குடும்பத்தையும் கொலை செய்யக் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் ரூபா திட்டமிட்டுள்ளார்.
டி.எஸ்.பி சரண்ஜித் சிங்

இரண்டு குழந்தைகளும் கொலை செய்யப்பட்டதில், ரூபாவின் ஆண் நண்பர் ஒருவருக்குத் தொடர்பு உள்ளதாக காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாகப் பேசிய டிஎஸ்பி சரண்ஜித் சிங், ``தஷ்ரத்தின் முழுக் குடும்பத்தையும் கொலை செய்யக் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் ரூபா திட்டமிட்டுள்ளார். தற்போது, ரூபாவின் மீது கொலை செய்த குற்றத்துக்காக ஐ.பி.சி 302-ன்கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு கொலை வழக்கில் தொடர்பு? - காயல்பட்டினத்தில் தௌஃபீக்கிடம் 2 மணிநேரம் விசாரணை
அடுத்த கட்டுரைக்கு