Published:Updated:

`உள்நாட்டு விவகாரங்களில் வெளிக் கருத்துகள் எப்போதும் ஏற்கப்படாது!' - இந்திய வெளியுறவுத்துறை

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
News
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்

உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்படாது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில், கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்புகள் உருவானதைக் கண்டித்து, பல்வேறு நாடுகள் கருத்து தெரிவித்துவந்த நிலையில், மத்திய அரசு அவர்களுக்கு பதில் அளித்துள்ளது. ஹிஜாப் விவகாரம் பற்றி அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கருத்து கூறிய நிலையில், இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஸ்ரீ அரிந்தம் பாக்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ``ஹிஜாப் விவகாரம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்துவருகிறது. அந்தப் பிரச்னையைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்தியாவின் அரசியல் அமைப்பு மற்றும் ஜனநாயக நெறி முறைகளின்படி ஹிஜாப் பிரச்னையைத் தீர்த்துக்கொள்வோம். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் கருத்துகள் எப்போதும் ஏற்கப்படாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.