Published:Updated:

ஒரு பிளேட் கச்சோரிக்காக நடுவழியில் ரயிலை நிறுத்திய மோட்டார்மேன்! -வைரலான வீடியோ... 5 பேர் சஸ்பெண்ட்

பார்சல் கொடுக்கும் கேட்மேன்

ஒரு பிளேட் கச்சோரிக்காக ரயிலை நடுவழியில் நிறுத்திய மோட்டார்மேன் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஒரு பிளேட் கச்சோரிக்காக நடுவழியில் ரயிலை நிறுத்திய மோட்டார்மேன்! -வைரலான வீடியோ... 5 பேர் சஸ்பெண்ட்

ஒரு பிளேட் கச்சோரிக்காக ரயிலை நடுவழியில் நிறுத்திய மோட்டார்மேன் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Published:Updated:
பார்சல் கொடுக்கும் கேட்மேன்

கிராமங்களில் சில நேரங்களில் பஸ் டிரைவரிடம் சாப்பாடு கொடுத்து அனுப்பும் காட்சிகளைப் பார்த்திருப்போம். வழியில் எங்காவது நிறுத்தி இது போன்று கொடுத்து அனுப்புவதுண்டு. அது போன்று ரயில்வே மோட்டார்மேன் ஒருவரும் சாப்பாட்டுக்காக ரயிலை பாதிவழியில் நிறுத்தி சிக்கலில் மாட்டிக்கொண்டார். ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் மாவட்டத்தில் ரயில் ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது. ஒரு லெவல் கிராஸிங்குக்கு அருகில் ரயில் வந்தபோது, ரயிலின் வேகம் குறைந்தது. உடனே சிக்னல் பிரச்னைக்காகத்தான் ரயில் மெதுவாகச் செல்கிறது என்று பயணிகள் நினைத்தனர்.

ரயில் லெவல் கிராஸிங் அருகில் வந்ததும் நின்றுவிட்டது. உடனே ரயில் தண்டவாளம் அருகிலேயே நின்றுகொண்டிருந்த ரயில்வே கேட்மேன் தன்னிடம் இருந்த ஒரு பாக்கெட்டை ரயில்வே மோட்டார்மேனிடம் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்ட மோட்டார்மேன் ரயிலை மெதுவாக நகர்த்த ஆரம்பித்தார். அந்த பாக்கெட்டில் என்ன இருக்கிறது என்று பார்த்தால் ஒரு பிளேட் கச்சோரி இருந்தது. கச்சோரி என்பது சிறிய வகை பூரியில் தயிர், இனிப்பு, மிச்சர் போன்ற பல வகையான பொருள்கள் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு வகை சிற்றுண்டி.

கச்சோரி
கச்சோரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வட மாநிலங்களில் இது மிகவும் பிரபலம். அந்தச் சிற்றுண்டிக்கு ஆசைப்பட்ட மோட்டார்மேன் ரயிலில் வந்துகொண்டிருக்கும்போதே கேட்மேனுக்கு போன் செய்து ஒரு பிளேட் கச்சோரி வாங்கிவைக்கும்படி கேட்டுக்கொண்டார். இவர்களின் செயலை நேரில் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் அதை அப்படியே வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துவிட்டார். இந்த வீடியோ வைரலானது.

பலர் ஒரு பிளேட் கச்சோரிக்காக ரயிலை நிறுத்துவதா என்று விமர்சனம் செய்தனர். ஒரு சிலர் ஏதோ ஆசையில் செய்துவிட்டார் என்று மோட்டார்மேனுக்கு ஆதரவுக்கரம் நீட்டினர். இந்த வீடியோவால் துரிதமாகச் செயல்பட்ட வடமேற்கு ரயில்வே இரண்டு மோட்டார்மேன், இரண்டு கேட்மேன், ஸ்டேசன் மாஸ்டர் என ஐந்து பேரைப் பணியிடை நீக்கம் செய்துள்ளது. வடமேற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி சசி கிரண் இது குறித்து கூறுகையில், ``கேட்மேன் ரயில் மோட்டார்மேனுக்கு ஒரு பார்சல் கொடுப்பது போன்ற வீடியோவைப் பார்த்தவுடன் அதில் தொடர்புடைய ஐந்து பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார். இந்த கச்சோரி விவகாரம் அடிக்கடி நடக்கக்கூடிய ஒன்று என்று தெரிகிறது. அதை ஒருவர் வீடியோ எடுத்துப் போட்டதால்தான் பிரச்னை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism