Published:Updated:

`உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்த 2 வயது குழந்தை!' - பெற்றோர் செய்த நெகிழ்ச்சி செயல்

அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இரண்டு வயது குழந்தையின் உடலை மருத்துவ ஆராய்ச்சிகாகக் குடும்பத்தினர் ஒப்படைத்துள்ளனர்.

மருத்துவமனை
மருத்துவமனை

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபரான சாத்னம் சிங் சாப்ராவுக்கு 2 வயதில் பெண் குழந்தை இருந்தது. அந்தக் குழந்தை சாண்ட்ஹோஃப் (Sandhoff disease) என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. 'இந்த நோயானது குழந்தை பிறந்த 3 முதல் 6 மாத காலத்தில் ஏற்படும்.

சாண்ட்ஹாஃப் நோய் என்பது மூளை மற்றும் முதுகெலும்பில் உள்ள நரம்பு செல்களை (நியூரான்கள்) படிப்படியாக அழிக்கும் ஒரு அரிதான மரபுக் கோளாறு ஆகும். இது குழந்தையின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தும். உறுப்புகள் ஒவ்வொன்றாகச் செயலிழக்கத் தொடங்கும்' என்கின்றனர் மருத்துவர்கள்.

Representation Image
Representation Image

இந்த நோயின் தாக்கம் குறித்து அறிந்த சாத்னம் சிங் தன் மகளை காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் இறங்கினார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தும் குழந்தையைக் குணப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் கடந்த புதன்கிழமையன்று அவரது வீட்டிலேயே குழந்தையின் உயிர் பிரிந்தது.

மருத்துவப் பரிசோதனையில் நோயின் தாக்கம் காரணமாகக் குழந்தையின் உறுப்புகள் செயலிழந்தது தெரியவந்துள்ளது. இந்தத் துயரமான நேரத்திலும் குழந்தையின் பெற்றோர்கள் எடுத்த முடிவு பாராட்ட வைக்கிறது. அரியவகை நோயால் இறந்த குழந்தையின் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒப்படைத்தனர். குழந்தையின் கண்களையும் தானமாக வழங்கியுள்ளனர்.

Representation Image
Representation Image

இதுகுறித்து பேசிய சாத்னம் சிங், ``என் மகளின் உடலை ஆராய்ச்சிக்காக வழங்கியுள்ளோம். எங்கள் குழந்தையைப்போல வேறு எந்தக் குழந்தையும் பாதிக்கப்படக்கூடாது. குழந்தைகளுக்கு பாதிப்பு இருந்தாலும் எங்கள் குழந்தை மூலம் மேற்கொள்ளப்படும் ஆய்வு மற்ற குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற உதவும்” என்றார். மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 2 வயதுக் குழந்தை உடல் தானமாக வழங்குவது இதுவே முதல்முறையாகும்.