Published:Updated:

`2 மணி நேரமா ஆம்புலன்ஸ் வரலை'... நிறைமாத கர்ப்பிணி மனைவியைத் தள்ளுவண்டியில் அழைத்துச் சென்ற அவலம்

தள்ளுவண்டியில்... ( ட்விட்டர் )

மனைவிக்குப் பிரசவவலி ஏற்பட்டதையடுத்து கணவர் ஒருவர் தள்ளுவண்டியில் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற வீடியோ இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.

மத்தியப் பிரதேசத்தின் தாமோ மாவட்டத்தின் ரானேஹ் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு செவ்வாயன்று பிரசவவலி ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து கைலாஷ் அஹிர்வார் என்பவர் 108 அரசு ஆம்புலன்ஸ் சேவைக்கு போன் செய்திருக்கிறார். சுமார் இரண்டு மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அருகிலிருந்த சுகாதார மையத்துக்குத் தன் மனைவியை தள்ளுவண்டியில் அழைத்துச் சென்றார்.

அங்கு செவிலியர்கள், மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் மனமுடைந்துபோனார். இதையடுத்து ஓர் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தன் மனைவியை அங்கிருந்து வேறு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு சரியான சிகிச்சை அளிக்காத காரணத்தால், அந்தப் பெண் டாமோ மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது மருத்துவர்களின் மேற்பார்வையில் அவர் இருப்பதாகக் கூறப்படுகிறது.

`2 மணி நேரமா ஆம்புலன்ஸ் வரலை'... நிறைமாத கர்ப்பிணி மனைவியைத் தள்ளுவண்டியில் அழைத்துச் சென்ற அவலம்

இந்த நிலையில் இது தொடர்பாக அதிகாரி ஒருவர், "கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஏன் வழங்கப்படவில்லை என்பது குறித்து சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது. விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணையைத் தொடங்கியது.

கடந்த வாரம், இதே போன்ற சம்பவம் பிந்த் மாவட்டத்தில் பதிவாகியிருந்தது. இந்த விவகாரம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக மூன்று பத்திரிகையாளர்கள் மீது மாவட்ட நிர்வாகம் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தது குறிப்பிடத்தக்கது.