Published:Updated:

காத்துவாக்குல மூணு காதல்; ஒரே நேரத்தில் 3 காதலிகளை மணந்த மத்தியப் பிரதேச ஆண்!

மௌரியா திருமணம்

நான்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சம்ரத் மௌரியா என்பவர், மூன்று பெண்களைக் காதலித்து வந்தார். பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்கள் மீது மௌரியா காதல் வயப்பட்டார். அதோடு திருமணம் செய்துகொள்ளாமலே அவர்களுடன் ஒரே வீட்டில் 15 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார்.

காத்துவாக்குல மூணு காதல்; ஒரே நேரத்தில் 3 காதலிகளை மணந்த மத்தியப் பிரதேச ஆண்!

நான்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சம்ரத் மௌரியா என்பவர், மூன்று பெண்களைக் காதலித்து வந்தார். பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்கள் மீது மௌரியா காதல் வயப்பட்டார். அதோடு திருமணம் செய்துகொள்ளாமலே அவர்களுடன் ஒரே வீட்டில் 15 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார்.

Published:Updated:
மௌரியா திருமணம்

மத்தியப் பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் ஆதிவாசி மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். இவர்களிடம், ஓர் ஆடவர் எத்தனை பேரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். அல்லது. திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழலாம் என்ற நடைமுறை இருந்து வருகிறது. இந்நிலையில், இங்குள்ள நான்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சம்ரத் மௌரியா என்பவர், மூன்று பெண்களைக் காதலித்து வந்தார். பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்கள் மீது மௌரியா காதல் வயப்பட்டார். அதோடு அவர்களுடன் திருமணம் செய்துகொள்ளாமலே கடந்த 15 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார்.

மவுரியா திருமணம்
மவுரியா திருமணம்

மௌரியாவிடம் போதிய பண வசதி இல்லாததால், தான் காதலித்த மூன்று பெண்களையும் அவரால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. ஆனாலும், மூன்று பெண்களுடனும் மௌரியா ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். தன் மூன்று காதலிகளுடன் மௌரியாவுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். குறிப்பாக, நான்பாய் என்ற பெண்ணுக்கு மட்டும் 4 குழந்தைகள் இருக்கின்றனர். மற்ற இரண்டு பெண்களுக்கும் தலா ஒரு மகன் உள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

என்றாலும், முறைப்படி திருமணம் செய்துகொள்ளாத காரணத்தால் மௌரியாவின் காதலிகளால் உறவினர்களின் சடங்குகள் மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியவில்லை. அதோடு தற்போது மௌரியாவுக்கு ஓரளவுக்கு வசதி வந்துவிட்டது. எனவே, தன் மூன்று காதலிகளுக்கும் மனைவி அந்தஸ்து கொடுக்க மௌரியா முடிவு செய்தார். அவர்களை திருமணம் செய்துகொள்ளத் தீர்மானித்தார்.

மௌரியா மற்றும் அவர் காதலிகளுக்கான திருமணச் சடங்குகள் மூன்று நாள்கள் நடைபெற்றன. திருமண அழைப்பிதழ் அச்சடித்து அனைவருக்கும் கொடுத்து, ஒரே மேடையில் மூன்று காதலிகளையும் மௌரியா திருமணம் செய்துகொண்டார். மூன்று பெண்களும் வேறு வேறு ஊரைச் சேர்ந்தவர்கள். திருமணத்தில் மூன்று பெண்களின் உறவினர்களும், உள்ளூர் தலைவர்களும் கலந்துகொண்டு மணமக்களை ஆசீர்வதித்தனர்.

Wedding Rituals
Wedding Rituals

மௌரியா, அவர் காதலிகளின் திருமணச் செய்தி மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ராகவேந்திர சிங்கிடம் கேட்டபோது, ``ஆதிவாசி சமுதாயத்தில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்ய முடியுமா என்று என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால், ஆதிவாசிகள் தங்களுக்குள் சில நடைமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism