Published:Updated:

`தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை சட்டபூர்வமாக்குங்கள்!'- தனிநபர் மசோதா தாக்கல் செய்த சுப்ரியா சுலே

LGBTQ ( Photo by Jose Pablo Garcia on Unsplash )

தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஜோடி இருவரும் ஆண்களாக இருந்தால் திருமண வயதை 21 ஆகவும், இருவரும் பெண்களாக இருந்தால் 18 ஆகவும் நிர்ணயிக்கக் கோரியும், கணவன், மனைவி என்ற வார்த்தைகளை 'ஸ்பௌஸ் (spouse)' என்ற வார்த்தையால் குறிப்பிடவும் முன்மொழிந்து மசோதாவை அறிமுகம் செய்தார் சுப்ரியா சுலே.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பியான சுப்ரியா சுலே, கடந்த வெள்ளிக்கிழமை மக்களவையில் தனிநபர் மசோதாவை (Private Member’s Bill) அறிமுகம் செய்தார். அதில், தன்பாலின திருமணத்தை சட்டபூர்வமாக்குவதற்கும், திருமணமான தம்பதிகளுக்கு கிடைக்கும் சட்டபூர்வ உரிமைகள், LGBTQIA சமூகத்தினருக்கும் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

சுப்ரியா சுலே
சுப்ரியா சுலே
ட்விட்டர்

நம் சமூகத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்கள், திருநர் சமூகத்தினர், பன்முகப் பால்பண்பு உடையவர்கள், பால் ஈர்ப்பு அற்றவர்கள் உள்ளிட்ட LGBTQIA சமூகத்தினர், புறக்கணிப்பு, துன்புறுத்தல் போன்றவற்றை எதிர்கொள்கின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 377 வது பிரிவை 2018-ம் ஆண்டில், இந்திய உச்ச நீதிமன்றம் நீக்கியது. அதாவது, ஓரினச் சேர்க்கையை கொலைக் குற்றத்திற்கு இணையான பெருங்குற்றமாகக் குறிப்பிட்ட இந்த சட்டப்பிரிவை நீக்கி உத்தரவு பிறப்பித்தது. அது ஓரினச் சேர்க்கையாளர்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்றியது. இருந்தாலும் இவர்கள் திருமணம் செய்துகொள்ள முடியாமலும், தங்களின் குடும்பத்தை வளர்க்க முடியாமலும் இருக்கின்றனர். வாரிசு, பராமரிப்பு மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட, திருமணமான தம்பதிகளுக்கு உள்ள பல உரிமைகள் LGBTQIA தம்பதிகளுக்கு வழங்கப்படவில்லை.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

எனவே 1954 சிறப்புத் திருமணச் சட்டத்தில் திருத்தம் செய்து, தன்பாலின திருமணத்தை சட்டபூர்வமாக்கக் கோரியும், மற்றும் திருமணமான LGBTQIA ஜோடிகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை வழங்குக் கோரியும் சுப்ரியா சுலே தான் அறிமுகம் செய்த மசோதாவில் கோரியிருந்தார். மேலும், தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஜோடி இருவரும் ஆண்களாக இருந்தால் திருமண வயதை 21 ஆகவும், இருவரும் பெண்களாக இருந்தால் 18 ஆகவும் நிர்ணயிக்கக் கோரியும், கணவன், மனைவி என்ற வார்த்தைகளை 'ஸ்பௌஸ் (spouse)' என்று வார்த்தையால் குறிப்பிட வேண்டும் எனவும், பல அம்சங்களை முன்மொழிந்து மக்களவையில் தனிநபர் மசோதாவை அறிமுகம் செய்தார் சுப்ரியா சுலே.