Election bannerElection banner
Published:Updated:

``உங்களை நீங்களே சூப்பர் ஹீரோ என்று நினைத்துக்கொள்ளாதீர்கள்!'' - மருத்துவரின் கண்ணீர் கோரிக்கை

மருத்துவர் திருப்தி
மருத்துவர் திருப்தி

``இந்த இரண்டாவது அலையில் இளைஞர்கள்கூட கொரோனா தொற்றால் உயிரிழந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எங்களால் உதவி செய்ய முடியவில்லை. நோயாளிகளின் நிலைமையைப் பார்க்கிற மருத்துவர்கள் நாங்கள் மிகுந்த மன அழுத்தத்துடன் இருக்கிறோம்."

``இதற்கு முன்னால் இப்படி ஒரு நிலைமையை நான் பார்த்ததே இல்லை" என்று மும்பை பெண் மருத்துவர் கண்ணீர் மல்க வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களைப் பதற வைத்துக்கொண்டிருக்கிறது.

corona
corona

தொற்றுநோய் மருத்துவரான அவர் பெயர் திருப்தி கிளாடா. அவர் அழுதபடியே பேசியுள்ள அந்த வீடியோவில், ``உங்களுக்கு இதுவரை கொரோனா வரவில்லையென்றாலோ, தொற்று ஏற்பட்டு குணமாகிவிட்டது என்றாலோ உங்களை நீங்களே சூப்பர் ஹீரோ என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். ஏனென்றால், அதன் பயங்கரத்தை மருத்துவர்கள் நாங்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.
படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்ஸிஜனும் ரெம்டெசிவிர் மருந்தும் கிடைக்காமல் பற்றாக்குறையால் தவித்துக்கொண்டிருக்கிறோம்.

இந்த இரண்டாவது அலையில் இளைஞர்கள்கூட கொரோனா தொற்றால் உயிரிழந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எங்களால் உதவி செய்ய முடியவில்லை. நோயாளிகளின் நிலைமையைப் பார்க்கிற மருத்துவர்கள் நாங்கள் மிகுந்த மன அழுத்தத்துடன் இருக்கிறோம்.

தயவுசெய்து வெளியில் செல்லாதீர்கள். சென்றாலும், மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள். இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கொரோனாவின் தீவிரம் குறைவாகவே இருக்கிறது. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்" என்று தன்னுடைய வீடியோவில் வேண்டுகோளும் விடுத்திருக்கிறார் டாக்டர் திருப்தி.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு