Published:Updated:

`நாட்டின் முதல் நடமாடும் கொரோனா சோதனை மையம்..!' - மகாராஷ்டிராவில் புதிய முயற்சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கொரோனா சோதனை மையம்
கொரோனா சோதனை மையம் ( Twitter@Anupam thareja )

இப்போது ஒரு மணிநேரத்திற்கு 15 முதல் 20 பேருக்குச் சோதனை செய்யப்படுகிறது. விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கும் வர உள்ளது.

கொரோனாவின் தாக்கம் நாளுக்குள்நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த ஆரம்ப நிலையிலேயே தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கொரோனாவின் தாக்கம் மற்ற நாடுகளில் உள்ள அளவுக்கு இந்தியாவில் இல்லை. மற்ற நாடுகளைவிட கொரோனாவினால் மரணித்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் குறைவு.

கொரோனா சோதனை மையம்
கொரோனா சோதனை மையம்
Twitter@Anupam thareja

இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசும், தனியார் அமைப்புகளும் பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அவற்றில் ஒன்றாக முதன்முறையாக, நடமாடும் கொரோனா சோதனை மையம் மகாராஷ்டிரா மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

"இதுவரை 56,948 பேர் பாதிக்கப்பட்டு, நாட்டிலேயே அதிக கொரோனா நோயாளிகளைக் கொண்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுபோன்ற ஒரு வசதி கொரோனா பாதிப்பை விரைவாகக் கண்டறியவும். பரவுவதைத் தடுக்கவும் உதவும். மேலும் கொரோனா பரவல் அடுத்த சில மாதங்களில் இன்னும் அதிகரிக்கலாம் என்பதால் இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஐ.ஐ.டி அலுமினி கவுன்சில், மும்பை மாநகராட்சி, கே.ஆர்.எஸ்.எஸ்.என்.ஏ சோதனை அமைப்பு ஆகியவை ஒன்றாக இணைந்து இந்த நடமாடும் கொரோனா சோதனை மையத்தை நிறுவியுள்ளன. ஜாவா ஆட்டோ மொபைல் நிறுவனம் இந்தச் சோதனை மையத்தை ஆம்னி பேருந்து போன்று வடிவமைத்துக் கொடுத்துள்ளது. இன்றிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ள இந்த நடமாடும் சோதனை மையம், தற்போது கொரோனா வாரியர்ஸாகக் கருதப்படும் காவல் துறையினர், செவிலியர்கள், மருத்துவர்கள், தன்னார்வலர்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இப்போது ஒரு மணிநேரத்திற்கு 15 முதல் 20 பேருக்குச் சோதனை செய்யப்படுகிறது. விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கும் வர உள்ளது. அப்படி வரும்பட்சத்தில் இதன் பயன்பாடானது 100 மடங்காக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இத்திட்டம் வெற்றி பெரும் சூழலில் கொரோனா தாக்கம் அதிகமுள்ள மற்ற மாநிலங்களுக்கும் இந்த நடமாடும் சோதனை மையம் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இந்தச் செயல்பாட்டை வெளிநாடுகள் பலவும் பாராட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு