Published:Updated:

`அவள் விருப்பப்படி வாழட்டும்!' - திருநம்பியுடன் மகளை வாழ அனுமதிக்காத பெற்றோர்; உதவிய உயர்நீதிமன்றம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
Court (Representational Image)
Court (Representational Image) ( Image by miami car accident lawyers from Pixabay )

அப்பெண், தன் பெற்றோரிடம் தன் விருப்பத்தைச் சொல்லிவிட்டு தன் காதலருடன் உத்தரப்பிரதேசத்திற்கு சென்றார். ஆனால் இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் அப்பெண்ணை அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மும்பையை சேர்ந்த 29 வயது திருநம்பிக்கும் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டது. இருவரும் 2019-ம் ஆண்டில் இருந்து நட்பில் இருந்து வந்தனர். இருவருக்கும் சிந்தனைகள், எண்ணங்கள் எனப் பலவற்றிலும் ஒத்த அலைவரிசை இருந்ததால், இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர்.

முன்னதாக, இளம்பெண் வேறு ஓர் ஊரில் தங்கிப் படித்து வந்தார். அதே ஊரில் திருநம்பியும் பணியாற்றிய போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. கொரோனா பொதுமுடக்கத்தின் போது அப்பெண் தன் பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். கடந்த பிப்ரவரி மாதம் திருநம்பி பர்பானி அவரின் வீட்டுக்குச் சென்று இளம்பெண்ணை சந்தித்துப் பேசினார்.

Love
Love
Image by Gerd Altmann from Pixabay
உங்கள் ரிலேஷன்ஷிப் பற்றி பெற்றோர்களிடம் எப்போது சொல்லலாம், கூடாது?#AllAboutLove - 15

அப்பெண், தன் பெற்றோரிடம் தன் விருப்பத்தைச் சொல்லிவிட்டு தன் காதலருடன் உத்தரப்பிரதேசத்திற்கு சென்றார். ஆனால் இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் அப்பெண்ணை அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஏப்ரல் மாதம் மீண்டும் இளம்பெண் தனது வீட்டை விட்டுச் சென்று, தன் காதலருடன் வேறு ஓர் ஊரில் சேர்ந்து வாழ முடிவு செய்தார்.

இதற்காகச் சேர்ந்து வாழும் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ளவும் திட்டமிட்டனர். மீண்டும் இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், ராஜஸ்தானில் இருந்த இளம்பெண்ணை போலீஸார் மீட்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து திருநம்பி, மும்பை உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதி தேஷ்முக் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. திருநம்பி தனது மனுவில், தன் காதலியை அவரின் பெற்றோர் சட்டவிரோதமாக அடைத்து வைத்திருக்கின்றனர் என்றும், அவரை கட்டாயத் திருமணத்துக்கு நிர்ப்பந்தம் செய்கின்றனர் என்றும் தெரிவித்திருந்தார்.

Court -Representational Image
Court -Representational Image
வீட்டு பெயர் பலகையில் மகள், மருமகளுக்கும் இடம்; மகாராஷ்டிரா கிராம மக்களின் புது முயற்சி!

வழக்கில், இளம்பெண் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடமும் நீதிபதிகள் விசாரணை நடத்தினர். இதில் அப்பெண், தன் பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை என்று தெரிவித்தார். அதோடு தன் காதலருடன் செல்லவே விரும்புவதாகத் தெரிவித்தார். இதையடுத்து இளம்பெண்ணை திருநம்பியுடன் செல்ல அனுமதித்த நீதிமன்றம், இளம் பெண் மேஜர் என்பதால் அவர் விருப்பப்படி முடிவு எடுக்க முடியும், அவர் விருப்பப்படி வாழ முடியும் என்று உத்தரவிட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு