Published:Updated:

`தற்கொலைக்கு என்ன தண்டனை சார்?' - மும்பை போலீஸை பதறவைத்த இளைஞர்

வான்ராய் காவல்நிலையம்
வான்ராய் காவல்நிலையம்

நிலேஷ் ஐ.டி துறையில் பணிபுரிந்து வந்தாலும் சமீபகாலமாக மதுவுக்கு அடிமையாகியுள்ளார். இதனால் எழுந்த பிரச்னை காரணமாகக் கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளார்.

மும்பையை அடுத்த கோரெகாவ் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நிலேஷ் பெடேகர். நேற்று இரவு இவர் மும்பை காவல்துறை ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து ஒரு அதிர்ச்சி ட்வீட் ஒன்றை பதிவிட்டார். அதில், ``நான் தற்கொலை செய்துகொள்ள நினைத்துக்கொண்டிருக்கிறேன். அதற்கான தண்டனை என்ன என்பதை நான் அறிய விரும்புகிறேன். அதற்காக விக்கிப்பீடியா மற்றும் கூகுளில் தேடினேன். ஆனால், சரியான பதில் கிடைக்கவில்லை" எனத் தற்கொலைக்கு என்ன தண்டனை என்று பதிவிட்டார்.

ட்வீட்
ட்வீட்

இதைப் பார்த்து பதறிய மும்பை காவல்துறை, அவரின் பதிவுக்குக் கீழே, ``நிலேஷ், சிக்கல்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி. அதற்காகத் தற்கொலையைத் தேர்ந்தெடுப்பது தீர்வு அல்ல. வான்ராய் காவலர்கள் உங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவார்கள்" என்று கூறி அவரின் விலாசத்தைப் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் வான்ராய் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஷேக் என்பவர் நிலேஷின் வீட்டுக்குச் சென்று அவரது தற்கொலை எண்ணத்தை திசைதிருப்பியுள்ளார். மேலும் அவருக்குத் தேவையான கவுன்சிலிங் பெறவும் உதவியுள்ளார். இதன்பின்பே நிலேஷ் தனது தற்கொலை எண்ணத்தை கைவிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. மும்பை போலீஸின் உதவிக்கு பதில் கொடுத்துள்ள நிலேஷ், ``தவறுக்கு நான் மிகவும் வருந்துகிறேன். நேற்று நான் கட்டுப்பாட்டை இழந்துவிட்டேன். வான்ராய் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷேக்குக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர் உண்மையில் ஒரு சிறந்த மனிதர். மும்பை போலீஸ் படையில் ஒரு மாணிக்கம் என்று நான் கூறுவேன். எனக்கு உதவிய மக்களுக்கு ஒரு மில்லியன் நன்றி சொல்லிக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

மும்பை போலீஸ்
மும்பை போலீஸ்

நிலேஷ் ஐ.டி துறையில் பணிபுரிந்துவந்தாலும் சமீபகாலமாக மதுவுக்கு அடிமையாகியுள்ளார். இதனால் எழுந்த பிரச்னை காரணமாகக் கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளார். அந்தவகையில் தற்கொலை எண்ணம் குறித்து மும்பை போலீஸுக்கு அவர்கள் தக்க நேரத்தில் வந்து உதவியுள்ளனர். நிலேஷ் தற்கொலை செய்வதில் காப்பாற்றிய மும்பை போலீஸின் நடவடிக்கைக்கு நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு