Published:Updated:

மும்பை: `குடிசைப் பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகம்!’ - ஆய்வில் தகவல்

மும்பை குடிசைப் பகுதிகள்
News
மும்பை குடிசைப் பகுதிகள்

``கொரோனா பாதிப்புகள் குறித்து நிதி ஆயோக், மும்பை மாநகராட்சி மற்றும் டாடா ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன இணைந்து மருத்துவ ஆய்வு ஒன்றை நடத்தியது.”

கொரோனா வைரஸால் இந்தியா கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. இதுவரை பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 15,31,669 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்படைந்தவர்களில் 5,09,447 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் 9,88,029 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,193 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலம் பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக, அம்மாநிலத்தில் உள்ள மும்பை பகுதிகள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளன. மும்பையில் பாதிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் அதிர்ச்சியளிக்கும் வகையில் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கொரோனா
கொரோனா

இந்தியாவின் மிகவும் முக்கியமான பகுதியாக மும்பை உள்ளது. இங்கு மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மற்ற நகரங்களை ஒப்பிடுகையில் இந்தப் பாதிப்பு மிகவும் அதிகம் ஆகும். சுமார் 6,000 பேர் இப்பகுதியில் வைரஸ் தொற்றால் மரணமடைந்துள்ளனர். இந்த நகரத்தில் மொத்தம் சுமார் 1.2 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் சுமார் 65 சதவிகிதம் பேர் குடிசைப் பகுதிகளில் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், கொரோனா பாதிப்புகள் குறித்து நிதி ஆயோக், மும்பை மாநகராட்சி மற்றும் டாடா ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன இணைந்து மருத்துவ ஆய்வு ஒன்றை நடத்தின. சுமார் மூன்று நகராட்சி வார்டுகளில் வசிக்கும் சுமார் 7,000 தன்னார்வலர்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

ஆய்வில், நகர் பகுதிகளில் வசிப்பவர்களில் ஆறில் ஒருவர் அல்லது சுமார் 16 சதவிகிதம் பேர் கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நகரப் பகுதிகளைவிட, பொது கழிப்பறைகளைப் பயன்படுத்தும் மக்கள் நெருக்கடி அதிகமாக உள்ள குடிசைப் பகுதிகளில் பாதிப்பு அதிகமாக இருந்துள்ளது. அதாவது, அப்பகுதியில் சுமார் 57 சதவிகிதம் மக்கள் பாதிப்படைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உடலில் உள்ள எதிர்ப்புசக்தி, நோய்ப்பரவல் தன்மை ஆகியவற்றைக் கண்டறிய இந்த ஆய்வு பொதுமக்களிடம் ரேண்டமாக நடத்தப்பட்டுள்ளது. பாதிப்படைந்தவர்களில் அதிகமானவர்கள் அறிகுறி இல்லாமல் இருந்துள்ளனர் என்றும் இறப்பு விகிதம் என்பது 0.5% முதல் 0.10% வரை குறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மும்பையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 717 கொரோனா வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த இரண்டு மாதங்களை ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவானதாகும். நோய்த்தொற்று அதிகம் அறிகுறி இல்லாமல் இருப்பதால் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.