Published:Updated:

யோகியின் `காசியாபாத்’ அசைன்மென்ட்! - உ.பி-யில் மீண்டும் கவனம் ஈர்த்த தமிழர் முனிராஜ் ஐ.பி.எஸ்!

முனிராஜ்

தமிழ்நாட்டைச் சேர்ந்த முனிராஜ் ஐ.பி.எஸ் அதிகாரி, உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தின் முழுநேர எஸ்.எஸ்-பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

யோகியின் `காசியாபாத்’ அசைன்மென்ட்! - உ.பி-யில் மீண்டும் கவனம் ஈர்த்த தமிழர் முனிராஜ் ஐ.பி.எஸ்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த முனிராஜ் ஐ.பி.எஸ் அதிகாரி, உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தின் முழுநேர எஸ்.எஸ்-பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Published:Updated:
முனிராஜ்

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முனிராஜ். 2009 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரி. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பணியாற்றிவருகிறார். யோகி ஆதித்யநாத் கடந்த முறை உ.பி முதல்வராக இருந்தபோது, முனிராஜ் பல முக்கிய மாவட்டங்களில் பணியாற்றியிருக்கிறார்.

முனிராஜ்
முனிராஜ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதிரடி நடவடிக்கையால் அங்குள்ள மக்களால் ‘சிங்கம்’ என்று அன்பாக அழைக்கப்படுகிறார். காசியாபாத் எஸ்.எஸ்-பியாக இருந்த பவன்குமார் ஐ.பி.எஸ் அங்கு குற்றக்ஷ் சம்பவங்களை குறைக்க நடவடிக்கை எடுக்காததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து ஏப்ரல் மாதம், முனிராஜை காசியாபாத் மாவட்டத்தின் தற்காலிக எஸ்.எஸ்-பியாக நியமித்து உத்தரவிட்டது உ.பி அரசு. அவர் பதவியேற்ற நேரத்தில் வழிப்பறிக் கொள்ளை, சங்கிலிப் பறிப்பு என்று காசியாபாத் முழுவதும் க்ரைம் ரேட் எகிறிக்கொண்டேயிருந்தது.

முனிராஜ்
முனிராஜ்

முனிராஜ் ஏற்கெனவே காசியாபாத்தில் பணியாற்றியிருக்கிறார். இதனால், கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றது முதல் நேரடிக் கள ஆய்வுகள் மூலம் நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கணவனை இழந்த பெண் ஓருவரின் நிலத்தை, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு நில அபகரிப்பு மாஃபியா ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இது குறித்து முனிராஜிடம் புகார் கொடுத்த அதே நாளில், நிலத்தை அந்தப் பெண்ணுக்கு மீட்டுக் கொடுத்திருக்கிறார்.

முனிராஜ்
முனிராஜ்

இது போன்ற நடவடிக்கைகளால், முனிராஜை காசியாபாத்தின் முழுநேர எஸ்.எஸ்-பியாக நியமித்து உ.பி அரசு உத்தரவிட்டுள்ளது. முனிராஜ் கடந்த ஆண்டு தேர்தல் பிரிவுக்கு மாற்றப்பட்டார். கடந்த ஆட்சியில் வழங்கிய முக்கிய அசைன்மென்ட்டுகளைத் திறம்படச் செய்திருக்கிறார். அந்த வகையில் யோகி, மீண்டும் முதல்வராகப் பதவியேற்றதும், முனிராஜ்க்கு வழங்கப்பட்ட முதல் அசைன்மென்ட் இதுதான்.

இது குறித்து முனிராஜ் கூறுகையில், “பிரச்னைகள் நடக்கும் முக்கியப் பகுதிகளில் சிறப்புப் படையினர் மூலம் கண்காணித்துவருகிறோம். சிசிடிவி இல்லாத இடங்களில் உடனடியாக கேமராக்களைப் பொருத்த முடிவு செய்திருக்கிறோம். ஆக்கிரமிப்பு, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளோம்.

முனிராஜ்
முனிராஜ்

மாவட்டத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும், தனியாக சைபர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. மக்கள் அங்கேயே சைபர் தொடர்பான புகார்களையும் அளிக்கலாம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism