Published:Updated:

மூணாறு நிலச்சரிவு: `மீட்புப் பணிகள் ஒருவாரம் நீடிக்கலாம்!' - மத்திய அமைச்சர் முரளிதரன்

மூணாறு நிலச்சரிவு மீட்புப் பணி
மூணாறு நிலச்சரிவு மீட்புப் பணி

மூணாறு நிலச்சரிவு நடந்த இடத்தை, மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் நேரில் ஆய்வு செய்து, மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமலை பகுதியில் அமைந்துள்ள பெட்டிமுடி என்ற இடத்தில், கடந்த வியாழக்கிழமை இரவு, கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், அங்கு இருக்கும் கண்ணன் தேவன் டீ எஸ்ட்டேட்டில் வேலை செய்துவந்த தோட்டத் தொழிலாளர்களின் வீடுகள் மண்ணில் புதைந்தன. இச்சம்பவத்தில் சுமார் 80 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மூணாறு நிலச்சரிவு மீட்புப் பணி
மூணாறு நிலச்சரிவு மீட்புப் பணி

இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்புக் குழு, கேரள தீயணைப்புத்துறை, வனத்துறை, வருவாய் மற்றும் சுகாதாரத்துறை, மேலும், சுற்றியுள்ள டீ எஸ்ட்டேட்டைச் சேர்ந்த நபர்கள் என சுமார் 150 பேர் கடந்த மூன்று நாள்களாக, மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மூணாறு நிலச்சரிவு: மோப்ப நாய்; ஒரே இடத்தில் 8 உடல்கள்... 42 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை

இதற்கிடையில், கேரள அமைச்சர்கள் எம்.எம்.மணி, ராஜு ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன், இன்று சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தார். மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மூணாறு நிலச்சரிவு பகுதியில் அமைச்சர் ஆய்வு
மூணாறு நிலச்சரிவு பகுதியில் அமைச்சர் ஆய்வு

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முரளிதரன், ``மீட்புப் பணிகள் விரைவாக நடந்துவருகிறது. ஓய்வில்லாமல் இங்கே பணி செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவத்தை கவனத்தில் எடுத்துக்கொண்டு, தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களுக்குத் தேவையான சாலை, மருத்துவம், தொலைதொடர்பு வசதிகளை மாநில அரசு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்த மீட்புப் பணி இன்னும் ஒரு வாரம் நீடிக்கலாம் எனத் தெரிகிறது” என்றார்.

கேரளா: `பழுதான லேண்டிங் கியர்; இரண்டாகப் பிளந்த விமானம்!' - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
அடுத்த கட்டுரைக்கு