Published:Updated:

கையறு நிலையில் பரிதவித்த இந்துக் குடும்பம்; உதவிக் கரம் நீட்டிய இஸ்லாமியர்கள்! - நெகிழ்ச்சி சம்பவம்

உதவிக் கரம் நீட்டிய இஸ்லாமியர்கள்

இக்கட்டான சூழலில், அவருக்கு உதவ அக்கம் பக்கத்தில் வசித்து வந்த முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைந்து உதவி செய்ய முடிவெடுத்திருக்கின்றனர்.

கையறு நிலையில் பரிதவித்த இந்துக் குடும்பம்; உதவிக் கரம் நீட்டிய இஸ்லாமியர்கள்! - நெகிழ்ச்சி சம்பவம்

இக்கட்டான சூழலில், அவருக்கு உதவ அக்கம் பக்கத்தில் வசித்து வந்த முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைந்து உதவி செய்ய முடிவெடுத்திருக்கின்றனர்.

Published:Updated:
உதவிக் கரம் நீட்டிய இஸ்லாமியர்கள்

ராஜஸ்தான் மாநிலம், சுருவைச் சேர்ந்த சன்வர்மல் ஷர்மா-சரளா தம்பதியினருக்கு மூன்று மனநலம் குன்றிய குழந்தைகள் இருக்கின்றனர். குழந்தைகளின் சிகிச்சைக்காக சன்வர்மல் ஷர்மா தன்னுடைய பூர்வீக நிலம், வீடு ஆகிய அனைத்து சொத்துகளையும் விற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் குழந்தைகளின் உடல்நிலையில், எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் தம்பதியினர் அதீத மனஉளைச்சலில் தவித்து வந்தனர்.

இந்த இக்கட்டான சூழலில், அவருக்கு உதவ அக்கம் பக்கத்தில் வசித்து வந்த முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைந்து உதவி செய்ய முடிவெடுத்திருக்கின்றனர்.

இஸ்லாம்
இஸ்லாம்

அந்தப் பகுதியில் வசித்து வந்த, இஷாக் கானின் குடும்பத்தினர் அவருக்கு உதவ முன்வந்தனர். இதைத் தொடர்ர்ந்து, இஷாக் கானின் மகன் லத்தீஃப் என்பவர் இவர்களுக்கு 300 சதுர கெஜம் (300 square yards) நிலத்தை இலவசமாக சன்வர்மல் ஷர்மாவின் பெயரில் பதிவுசெய்தார். மேலும் லத்தீஃபின் நண்பர் இஸ்லாம் மற்றும் அந்தப் பகுதியில் வசிக்கும் சிலர் ஒன்றிணைந்து ரூ.80,000 வசூலித்து அந்த நிலத்தில் இவர்களுக்காக ஒரு அறை கட்டினார்கள்.

உதவிக் கரம் நீட்டிய இஸ்லாமியர்கள்
உதவிக் கரம் நீட்டிய இஸ்லாமியர்கள்

ஆனால் அந்த அறை இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. இதனால் இஸ்லாம் அவர்களுக்காக ஒரு அறையை வாடகைக்கு எடுத்து கொடுத்திருக்கிறார். அறை தயாராகும் வரை தற்காலிகமாக அங்கேயே தங்கிக்கொள்ளலாம் எனவும் கூறியிருக்கிறார்.

"மதநல்லிணக்கத்துக்கு ஆகச் சிறந்த உதாரணம் இதுதான்!" என மனம் நெகிழ்கிறார்கள் சுரு பகுதி மக்கள்.